விடிவெள்ளி
நம்விளக்கு
விரிகடலே
பள்ளிக்கூடம்
அடிக்கும் அலை நம்
தோழா
அருமை மேகம் நமது
குடை
பாயும் புயல் நம்
ஊஞ்சல்
பனிமூட்டம் உடல்
போர்வை
காயும் ரவிச்சுடர்
கூரை
கட்டுமரம் வாழும்
வீடு
மின்னல் வலை
அரிச்சுவடி
பிடிக்கும்
மீன்கள் நம் பொருட்கள்
மின்னல், இடி
காணும் கூத்து
வெண்மணலே பஞ்சு
மெத்தை
முழு நிலாதான் நம்
கண்ணாடி
மூச்சடக்கி நீந்தல்
யோகம்
தொழும் தலைவன்
பெருவானம்
தொண்டு தொழிலாளர்
நாங்கள்.
- இப்பாடல் பரதவர்
(மீனவர்) பாடல் என மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களின்
தமிழ் செய்யுள் பாடநுலில் (2002 - 2007) உள்ளது.
No comments:
Post a Comment