Showing posts with label பரதவர். Show all posts
Showing posts with label பரதவர். Show all posts

24 July 2010

புங்குடு தீவு (Pungudutivu)


புங்குடுதீவு (Pungudutivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகும். யாழ் நகரிலிருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல்
நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது. இங்கு சிறிதளவு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடியும் சிறப்பாக
நடைபெறுகின்றன.

பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது.

இன்றைய இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக இத்தீவின் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது. பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பொ. ரகுபதி, காரைநகரிலுள்ள களபூமியில் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்கள் சிலவற்றைக் கண்டு பிடித்தார்.

இத்தகைய சின்னங்கள் புங்குடுதீவின் வடபகுதியில் உள்ள ஊரைதீவிலும் காணப்படுகின்றன.

இங்கு வட்டக்கற்களாலான சிறு கிணறுகள் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஊரைதீவிலுள்ள ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்தது. இது இப்பொழுது சிவாலயமாக மாறிவிட்டது. இவ்வாலயத்திலுள்ள கருங்கற் தூண், லிங்கம் என்பன வளர்வதாக கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வடக்கே உள்ள கடற்கரையில் வட்டக்கற்களினாலான இரண்டு கிணறுகள் இருக்கின்றன.

சேர சோழ பாண்டிய மண்டலங்களோடு ஈடமண்டலமும் ஒன்றாகும். சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் சனங்கள் ஈழமண்டலத்தில் குடியேறினர், என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியுள்ளார்.

காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறினர். தென்னிந்திய மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்துக்குக் காலம் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. புங்குடுதீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. நெடுந்தீவில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.

புங்குடுதீவின் பழைய துறைமுகமான புளியடித்துறைக்கு அருகிலும் பெருக்கு மரங்கள் காணப்பட்டன. இம்மரங்கள் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே அரேபியர் இத்தீவுகளுக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.

தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.

தமிழகத்திலே (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை) மேலாதிக்கம் பெற்ற சோழர் பெருமன்னர்கள் சுமார் ஒரு நூற்றாண்டிற்கு இலங்கையின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இக்கால கட்டத்தில் இந்து சமயம் இங்கு மேலோங்கியிருந்தது எனலாம்.

தமிழ்நாட்டிலே ஆதிக்கம் பெற்ற இரண்டாவது பாண்டிய பேரரசு காலத்திலே அவர்களின் ஆதரவுடன் அவர்களின் தளபதிகளில் ஒருவன் ஆரியச்சக்கரவத்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்றை உருவாக்கி கி.பி. 1250 முதல் பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
இக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம்.

இதன் பின்பு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது. முன்னைய அரசரின் ஆட்சிக்காலங்களிலும் இந்து சமயம் நலிவுற்றது.

பிரித்தானியர் காலத்தில் பொதுவாக சமய சுதந்திரம் நிலவியது எனலாம். ஆதி காலம் தொடக்கம் கிரேக்க உரோம, அராபிய, சீனத் தொடர்புகள் இலங்கையுடன் ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம், கலிங்கம் மற்றும் வட இந்திய தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான தொடர்புகள் ஏதோ வகையில் தீவகத்திலும் ஓரளவாவது நிலவி வந்தமைக்கு சில இடப்பெயர்கள் சான்று பகர்கின்றன.

பல்லதீவு, பல்லவன்புலம் போன்ற இடப்பெயர்கள் பல்லவத் தொடர்பையும் சோழன்புலம், சோழகனோடை போன்றவை சோழத் தொடர்புகளையும் மாறன்புலம், பாண்டியன் வளவு போன்றவை பாண்டியத் தொடர்பையும், கலிங்கன்புலம், கலிங்கராயன் வளவு போன்றன கலிங்கத் தொடர்பையும் செட்டிவளவு, செட்டியர் தோட்டம் என்பவை செட்டிகளின் தொடர்புகளையும் பணிக்கன்புலம், போன்றவை கேரளத் தொடர்பையும் சீனன்புலம், சாவகன் வளவு போன்றவை முறையே சீனத் தொடர்பையும் சாவகத் தொடர்பையும் காட்டுகின்றன.

புங்குடுதீவில் 90 சதவீதம் இந்துக்களே வாழுகின்றனர். தீவின் நடுப்பபுதியில் குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென்கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போர்த்துக்கல் அரசனால் மதம் மாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர்.

எனினும் கிறிஸ்தவ அறிவைப் போதியளவு கொண்டிராத நிலையில் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் வருகையானது மிகப் பெரிய மாறுதலை பரதவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு செயலாற்றிய புனிதரின் சேவை மிகு போதகம், அவர்கள் வாழ்ந்து வந்த பாதையைச் சீர் செய்தது.

1545 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரதவ கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர். இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.

சில காலம் செல்லத் தீவின் மத்திய பகுதியில் ஆலமரங்களும் பற்றைகள், புதர்களும் நிறைந்த இடத்தில் புனித சவேரியாரின் ஆலயத்தை அமைத்தனர். பின்பு அதன் சூழலில் வாழத் தொடங்கினர். இவ்வாறே புங்குடுதீவின் வேறு சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழத் தொடங்கினர்.

அதனை புங்கு 10 உடுதீவு எனப்பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப்பொருள் கூறலாம். புங்கமரம் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்று.

19 July 2010

Conversion of Paravars

René Fullop Muller
SOB MIL MÁSCARAS DIVERSAS
-A História das Primeiras Missões Jesuítas

மேற்கண்ட போர்ச்சுக்கீசிய புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு (

http://translate.google.com/# வழியாக)

2. AMONG Pearl-Rajas

In the extreme south of India Gangetic lived caste of Paravars, a tribe that covered more or less twenty thousand souls. Paravars these were, for the year L530, attacked by a

Muslim savage tribe, and touched by their plight, decided to cry for help from the Portuguese.

A deputation of pearl fishers to move towards Goa and stated there that if they ripped off the Portuguese Muslims back height, would be willing to convert all the religion of the Europeans.

The governor entered the real under this proposal, gladly, and also established condition as merely an annual tribute of two boats laden with pearls. Shortly before Cape Comorin anchored a fleet Portuguese, which expelled the marauding Muslims; in then it landed on the Catholic priests who had come together, entering the country under the leadership of the vicar

Generally, in order to perform the baptism of the whole tribe. From everywhere the Paravars surged and were putting themselves in order ranks: after the priests uttered some words in

Latin, which the pearl fishers did not understand, and each PARAVER TEBRAL answered a few words in Tamil, which the Fathers, in turn did not understand well. The ceremonies w

ere needed quickly, soon after distributed paper ballots which were written names

Portuguese baptism among the population, and the fleet began to way back to Goa, taking the vicar general, and other priests. The Portuguese colonial authorities, however, could report to his king with pride that they succeeded in saving twenty thousand souls from eternal damnation,

Leading them to the bosom of Holy Mother Church. Thereafter, the Paravars were delivering, annually, its tribute, and the whites of his hand, took care in exchange for the Mohammedan pirates keep away from the coast pearls. But, moreover, might remain in the Paravars

Peaceful observance of their traditional customs; never came a Christian priest in these strips of land and thus

Those pieces of paper on which was traced a name in letters not less incomprehensible

Incomprehensible, were the only reminder that linked the Paravars with his religious conversion.

When Francis Xavier came to Goa, already had eight years elapsed since the Christianization of the pearl fishers; eight years that a priest had also been there in the south between the community neophyte.

The miserable huts covered with palm leaves, in which these people lived, were located just behind the Cape Comorin, in a deserted coastline and Safara, whose dunes burning sporadically grew hedges arrays of palm trees and thorns. Here lived the Paravars, people muscular and slender, of a dark skin tone loaded, scattered in small villages. Day after day, because of the roner dawn, put them on the way to the sea, clad in cramped boats with candles in the shape of dovetail, and the sunset, they returned to their huts of reeds, bringing the prey of pearls conquered. In Tuticorin, the main town of the region, continued there is still the old pagan temples with idols colorful mounds of clay painted white and red, horses made of loam, stone tablets with snakes sacred bulls, cows and monkeys, and even in small villages, were grotesque and obscene symbols, very many, of all kinds, representing the cult traditional, to which the pearl fishers belonged since centuries. Paravars attended the baptism, to the multitudes, these

sanctuaries, and when they felt afraid before genies of fire (which, presaging misfortune, danced the night sea) then gave up in a hurry to go to their offering the fish gods oblate, or building new temples of mud and reed.

Then one day Xavier appeared in their midst, with his feet "Barefoot, taking over his body, a garment of a thousand patches, bringing his head covered by a hood miserable black wool. Maintained a canainha in hand, it tolled without cease and called them, with a few words of Tamil foreign accent, it sounded more or less: "Come, I preach good news. "

Still in Goa Xavier had with him that interpreters translate some sermons and prayers in Tamil and stood with great effort to decorate them. When, now, now that, since

Paravars of that village, managed to attract with the tinkle of canainha their children of natives, went on to explain them catechism, taught them to pray and sing the AVE, the small ones

delivered, most often, the task, as if there had treaty to learn a new toy. Were also children who have supplied the most important help in their fight against the pagan idols. They felt happy and

Happy when, under the direction of Father White, had permission to destroy the statues of various deities, in extent of their desires. Satisfied Xavier wrote this occasion to his brother who was in the homeland: "When someone tells me to worship idols, so what I do is meet the children's place and drive me with them to the point where they are idols. The insults that the devil Children are receiving more honors than that pagan adults it taxed, because the small snatch idols, reduce us to powder finer than ash, spit on them, trample us to toe and vex us from other ways even worse. "

Soon thoughts all the children focused in their enthusiastic parents as well by the strange man, and just as it is given in the city with you and Portuguese their slaves, it happened now with fishermen Pearls: Xavier has won them affection, they deposited blind trust in it and regarded it as a being higher; for since the night his canainha tinkle and its strange words about the invisible God, a kingdom of the blessed in heaven and a place of conviction had resonated deeply within the earth, over the back, since the fishermen have seen more feared the jinn from fire danced on the waves. Had the impression that the sound of your canainha there expelled from there the odd ghost.

After the mission accomplished on the backs of fishing started out with much success, Xavier was visiting, one after the other, all regions of the Portuguese colonial empire. Yet he trailed

along the coastline, through deserts of sand, in which feet dipped in warm soil, well, walking along inenetráveis through virgin forests. His remarkable talent language enabled him to learn, more or less, the

In those times the mass conversion to Christianity, brought out by Paravars in exchange for military aid Portuguese become a favorite custom in India. Thus the Prince of Candy, threatened by neighboring peoples, called for help of Portuguese troops and promised in exchange conversion all his people. With this he established military requirements very important because they could rely on the fact that in his principality was the famous rock, on which still had

opportunity to clearly see the footprint of Buddha, and that in a pagoda in the capital was saved a tooth PERFECT. Within such circumstances, the prince decided to give up the

belief of its greatest only in exchange for the referral of a strong military.

With the white soldiers had also entered into Candy traditional priests who, while they had

named the prince and the people. But later, when the tribes Mohammedan enemy were thrown out and the body Portuguese expeditionary left Ceylon again, Prince also returned to the old religion and ordered to open again the temple that held the tooth of Buddha.

A year later, precisely during the stay at Xavier South India, the sovereign was involved again in a military conflict and needed again, the urgent assistance of Portuguese arms. Xavier's fame has also penetrated into Ceylon, so the prince asked him for his mediation with the Government of Goa. Xavier accepted this task with joy and personally, went in company of the military Portuguese Candy and there sought to pursue new Christianization. Also in this case he has used, again, children, to do away once and for all, of idolatry. Children, his command, irroneram the famous temple, snatched the tooth Buddha, and zealous work, began to rub the rock sacred until no more could see traces of PERFECT footprint.

Other princes of the country also called the missionary, the learned so well that deal with the Portuguese authorities, and asked him to go to their courts, because at any moment,

the need arose to quell local rebellions with the help Europeans. Wherever this is a case so soon

Xavier appeared also to gather the inhabitants of the principality under consideration in exchange for military aid, through its canainha, and there, he began his catechism lessons.

After an activity of six years, Xavier had created in India a large sector of work. Earlier in the year of l549 he writes to Ignatius: "At the moment living members of our Society

in all parts of India where there are Christians. They are four in the Moluccas, two in Malacca, six in Cape Comorin, in Coxun two, two and four on the island Bascin Socotra. Each group is headed by a superior. His letters took a year to reach the country, after a long sea crossing. When one of these epistles arrived in Europe, that would always be a celebration of joy

for Catholic Christendom, so troubled by the heresy. King John of Portugal was enthusiastic about the success obtained by the mission which he himself initiated and enhanced.

Xavier sent letters to Spain too, where were read by order of the archbishop of Toledo in all

pulpits.

"They know us now, in Spain," wrote this Peter Faber occasion to Ignacio. "Where there until then nobody had heard about us or where we thought just taking into account the slander, there now praise God, nowhere else, no palace, no arrests and no hospital, where anyone,

rich or poor, noble or bourgeois, wise or ignorant, woman or child does not know how we live and what is the purpose of our Order. "

Link:

http://www.documentacatholicaomnia.eu/03d/sine-data,_Muller_RF,_A_Historia_Das_Primeiras_Missoes_Jesuitas,_PT.pdf

17 July 2010

கொற்கை - நூல் விமர்சனம்





ஒரு குறித்த பிரதேசத்தின் ஒரு மாத கால வரலாற்றை எழுதச் சொல்லி என்னிடம் கேட்டால், அது என்னால் முடியாது என்ற பதிலை உடனே கூறிவிடுவேன். எனவே ஒரு பிரதேசத்தின் 86 ஆண்டு கால வரலாற்றை கதை வழி சொல்லிச் செல்வதென்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு அரிய சாதனையாகும். அச்சாதனையை தனது கடின உழைப்பால் மிகவும் அனாயாசமாக தனது புதிய நாவலான கொற்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள்.
பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் கொழித்து விளங்கிய கொற்கை துறைமுக பிரதேசத்தில் 1914ல் ஆரம்பமாகும் நாவலின் கதையானது 2000 ஆண்டில் நிறைவு பெறுகிறது. இந்த கால இடைவெளியினுள் கொற்கையை சேர்ந்த பரதவர் சமூகத்தில் உருவாகிய மாற்றங்கள், நாடார் சமூகம் கொற்கையின் ஒரு அடையாளமாக மாறியதன் பின்னனியிலிருக்கும் அச்சமூகத்தின் அசுர வளர்ச்சி, கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் கொழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் உண்மை முகம் என கொற்கையின் உருமாற்றத்தை பிரம்மிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும் பாத்திரங்களுடனும் கூறிச் செல்கிறார் நாவலாசிரியர் குருஸ்.
கொற்கை பரதவர் சமூகத்தின் மதிப்பு பெற்ற தலைவராகிய தொன்மிக்கேல் பரதவர்ம பாண்டியனின் மரணத்துடன் ஆரம்பமாகிறது கதை. பரதவ சமூகத்தின் மன்னர்களாக விளங்கிய பாண்டியபதிகள் குறித்த வரலாறும், வாய் வழிக்கதைகளும் அவர்களிடம் இருந்திருக்ககூடிய சித்து சக்திகளும் ஆச்சர்யத்தை மனதில் விதைக்கின்றன. பரதவ சமூகத்தில் பிளவை உண்டாக்கி அதன் மூலம் தம் அதிகாரத்தை அவர்கள் மேல் நிலைநாட்ட விரும்பிய வெள்ளையர்கள், கத்தோலிக்க மத பிரதிநிதிகள், அவர்களின் சதிக்கு துணைபோன பரதவ சமூகத்தின் அந்தஸ்து நிறைந்த குடும்பங்கள் என்பவற்றின் அறிமுகங்களோடு நகர ஆரம்பிக்கிறது இப்பெருங்கதை.
தொழில் நுட்ப, இயந்திர வசதிகள் ஏதுமற்ற காலப்பகுதியில், மனித சக்தியையும், தேர்ந்த கடல் அறிவையும், அனுபவத்தையும் கொண்டு நடுக்கடலில் நிலை கொண்ட கப்பல்களிலிருந்து பாரிய யந்திரங்களை தோணிகளில் பொருத்தப்பட்ட விசேட அமைப்புக்களின் துணையுடன் கரைக்கு எடுத்து வரும் கொற்கை பரதவர்களின் அசர வைக்கும் திறமை வெள்ளையர்களை மட்டுமல்ல வாசகரையும் மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டும் சக்தியுடையது. நாவலின் இப்பகுதியை ஆசிரியர் மிகவும் விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார்.
நாவலின் ஆரம்பத்தில் வரும் கடலோடிகளின் கப்பல் பயண வாழ்க்கை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல், வர்ணனை என படிப்பவர்களை கப்பலினுள் இருக்கும் ஒரு பார்வையாளனாக ஆக்கி விடுகிறார் குருஸ். அவர்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், பலவீனங்கள், சிக்கல்கள், வன்முறை, குடும்பம், சாகசம் என அனைத்துக் குறித்தும் நேர்மையான பார்வையை நாவலின் அப்பகுதி வழங்குகிறது.
பரதவ சமூகத்தை சேர்ந்த தல்மெய்தா, ரிபேரா, சிங்கராயம், பல்டேனா ஆகிய அந்தஸ்து நிறைந்த குடும்பங்களின் பொற்காலத்தையும், கால ஓட்டத்தில் அக்குடும்பங்களினதும், குடும்ப வாரிசுகளினதும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இயல்பாக எடுத்துச் சொல்கிறது கதை. கதையின் நெடுகிலும் இக்குடும்பங்களை மட்டும் முன்னிறுத்தி அவர்கள் கதையைக்கூறாது, நாவலில் இடம்பெறும் வெவ்வேறு பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக இக்குடும்பங்களின் கதை சொல்லி முடிக்கப்படுகிறது. நாவலில் அறிமுகமாகும் சில பாத்திரங்கள் கதையோட்டத்தில் மாயமாக மறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நாவலில் பின்பு எங்கோ வரும் ஒரு வரியானது மறக்காது சொல்லிவிடுகிறது.
பரதவர்களின் கப்பல் ஓட்டத்தை தமது வணிகத்திற்கு ஆதாரமாக கொண்டிருந்த நாடார் சமூகம், எவ்வாறு கப்பல் வணிகத்தில் கால் நனைத்தது என்பதனையும், கொற்கைப் பிரதேசத்தில் நாடார் சமூகத்தினரின் பிரம்மிக்கத்தக்க வளர்சியையும் அதற்கான காரணங்களையும் மிகவும் நேர்மையாக தன் நாவலில் வழங்கியிருக்கிறார் குருஸ். நாடார் சமூகத்தில் தளைத்தோங்கிய ஒற்றுமையையும், பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையின்மையையும் கதை தெளிவாக காட்டுகிறது. நாவலின் இறுதிப்பகுதியில் நாடார் சமூகத்தில் கூட போட்டி, பொறாமை அதிகரித்து அவர்களிற்கிடையில் முன்னொரு காலத்தில் நிலவிய ஒற்றுமையானது விரிசல் கண்டு விட்டதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையற்ற சூழலினால் உருவாகிய பல்வேறு சங்கங்கள், அச்சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்குப் பதிலாக தம் சுயநலப்போக்கால் அச்சமூகத்தின் நலனைக் எவ்வாறு குழி தோண்டிப் புதைத்தன என்பதும் நாவலில் கூறப்படுகிறது. கத்தோலிக்க மத பிரதிநிதிகள் எவ்வாறு படிப்பறிவு இல்லாத பரதவர்களை சுரண்டினார்கள் என்பதனையும், குருக்கள், ஆயர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு மக்களிற்கு சேவை செய்வதற்கு பதிலாக சொகுசான சுகவாழ்வு வாழ்ந்ததையும் எந்த தயக்கமுமின்றி நாவலில் விபரிக்கிறார் குருஸ்.
நாவலின் மையமான கொற்கைத் துறைமுகமானது, காலநகர்வில் மனிதர்களைப் போலவே தன் முகத்தை மாற்றி மாற்றி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதையும், துறைமுகத்தின் அபிவிருத்தியால் கொற்கை பிரதேசத்தில் உருவாகிய அபரிமிதமான மாற்றங்களையும் சுவைபட நாவலில் எடுத்துரைக்கிறார் கதாசிரியர்.



திரு. ஜோ டி குரூஸ்
நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் யாவரையும் மனதில் இருத்திக் கொள்ளல் என்பது சிரமமான ஒன்றாகும். லிடியா, ரஞ்சிதா, சலோமி, மதலேன், பாக்கியம் போன்ற பெண்பாத்திரங்கள் அதிர்வையும், மனநெகிழ்வையும் தருபவையாக உருவாகி நிற்கின்றன. பரதவர் சமூகத்தின் பெண்களின் கண்ணீர் வரலாறு அவர்களின் வளர்ச்சியுடன் கைகோர்த்துப் பயணிக்கிறது. ஆனால் கதையில் வாசகர்களின் மனதில் இலகுவாக வந்து ஏறி விடும் பாத்திரம் பிலிப் தண்டல் பாத்திரமாகும்.

கப்பலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்து பின் பெரும் முதலாளியாக உருவாகும் பிலிப் தண்டல் பாத்திரம் நாவலின் நடுப்பகுதியில் மெதுவாக மறைந்து போய்விடுகிறது. நாவலினை தொடர்ந்து இழுத்துச் செல்லும் பிற பாத்திரங்கள் வழியாக, பிலிப் தண்டல் மீது நாம் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் தகவல்கள் வந்து விழுகின்றன. இருப்பினும் இப்பிரம்மாண்டமான நாவலை வாசகனின் மனதைக் கனக்க வைத்து நிறைவு செய்து வைப்பவர் பிலிப் தண்டல்தான்.
கதைமாந்தர்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்வமாக மயங்காத வகையில் கதையை கூறிச்செல்கிறார் குருஸ். ஆனால் நாவலின் சில தருணங்கள் அந்த இடத்திலேயே வாசகனின் மனதை கலங்கடிக்க வைக்கின்றன. மிகையலங்கார சோடனை சொற்கள் அற்ற குருஸின் எளிமையான வரிகளில் பொதிந்திருக்கும் கவர்ச்சி, அவரிற்கேயுரிய தனிச்சிறப்பாகும். நகைச்சுவையும், எள்ளலும் நிறைந்த வட்டார மொழி உரையாடல்களை படிப்பதே தனிசுகம். நாவல் முழுவதையும் வட்டார மொழிகள் அலங்காரம் செய்கின்றன. குறிப்பாக மன்னர் ஒருவர் வளர்த்த நாய் மன்னரிற்கு மாமா முறையாகும் கதை நாள் முழுக்க சிரிக்க வைக்கிறது. ஓவியர் ஆலிவர் வரைந்திருக்கும் நாவலின் அட்டைப்படம் மிகவும் எளிமையான ஒன்று. பாதி தோணியும் பாதி சரக்கு பெட்டக கப்பலுமாக சிலுவையுடன் தோற்றமளிக்கும் அச்சித்திரமே நாவலின் கதையை சுருக்கமாக கூறிவிடுகிறது.
நீண்ட பெருங்கதையின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு சிறிய அயர்ச்சியானது நாவலின் பிற்பகுதியால் இல்லாது ஆக்கப்படுகிறது. ஐந்து வருட கடின உழைப்பில் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார் ஜோ டி குருஸ். நான் இன்றுவரை கண்டிராத, கால் பதித்திராத கொற்கை, நாவலின் முடிவில் என் மனதில் பிரம்மாண்டமாக விரிகிறது. இதனை நிகழ்திக்காட்டக்கூடிய ஒரு எழுத்தாளன் சாதாரணமான ஒருவன் அல்ல. தன் வரிகளால் வாசகன் மனதில் அவன் தன் படைப்பை செதுக்கி, வாசகனையே அதனை அழகு பார்த்து ரசிக்க வைக்கும் கலைஞன் அவன். கொற்கையைப் போலவே ஜோ டி குருஸ் என் மனதில் பிரம்மாண்டமானவராக உருப்பெறுகிறார். ஆழி சூழ் உலகின் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் அல்ல என்பதனை கொற்கை நிரூபிக்கிறது. தமிழ் நாவல் இலக்கியத்தில் ஜோ டி குருஸின் பெயர் மறக்கப்படாத ஒன்றாக இருக்கும்.
கொற்கை,
விலை ரூ 800.
முதற்பதிப்பு - டிசம்பர் 2009.
காலச்சுவடு பதிப்பகம்,
669,கே.பி.சாலை, நாகர் கோவில் – 1.
தொலைபேசி: 04652-278 525.
kalachuvadu@sancharnet.in

• இந்நூல் 2013-ம் வருடத்திற்கான இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது

14 July 2010

நெய்தல் நில மன்னர்கள்


நெய்தல் நில மன்னர்கள்

- கலாநிதி ப.புஸ்பரட்ணம், இலங்கை


சங்ககாலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். இவற்றில் இருந்து தென்தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்த காவிரி நதிப்படுக்கைக்கும் தாமிரபரணி ஆற்றிட்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சமூகம் வாழ்ந்ததை அடையாளம் காண முடிகிறது. (ளுநநெஎசையவநெ 1985: 49 – 50) இவை தற்கால திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி எனக் கூறலாம். தொலமி, சோழ நாட்டிற்கும், பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம் (ஏநடரிpடைடயi 1980: 13) பரதவரின் முக்கிய தொழிலாக சங்க இலக்கியத்தில் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. பாண்டி நாட்டு செல்வமாக இருந்த முத்து பற்றி சங்க இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் பல குறிப்புக்கள் உள்ளன.


புறநானூறு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவரை பாண்டிய மன்னன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் சோழ மன்னருக்கு அவர்கள் சவாலாக விளங்கியதாகக் கூறுகிறது (புறம் 378’1) பெரிபுளஸ் என்ற நூலில் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட மக்களை பாண்டிய மன்னன் தனது சிறையில் அடைத்ததாகவும், சிறைத்தண்டணை பெற்ற மக்களைப் பாண்டிய மன்னன் முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகிறது. (ளுஉhழகக 1912: 46) முத்துக்குளித்தலில் பாண்டிய மன்னருக்கும் பரதவருக்கும் பிற்காலத்திலும் பகைமை இருந்ததை நெடுஞ்செழியன் பராந்தகன் வேள்விக்குடிச்செப்பட்டில் வரும் பரவரைப் பாழ்படுத்தும் என்ற சொல் உறுதிப்படுத்துகிறது. (முருகானந்தம் 1990, 3) முத்துக்குளித்தலைப் போல் சங்கு குளித்தலும் முக்கிய தொழிலாக விளங்கியது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13) – பாண்டி நாடு நெடுகிலும் சங்கும் முத்தும் விற்பனை செய்யப்பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. பாண்டிய மன்னர் வெள்வளை தரித்ததாக சின்ன மன்னூர் செப்பேடு கூறுகிறது. (ளுஐஐ.3:4)


பரதவரின் இன்னொரு தொழிலாக மீன் பிடித்தலும் வர்த்தகமும் விளங்கியது. முத்து பாண்டியரின் சொத்தாக விளங்கியது போல் மீன் பாண்டியரின் பிரதான உணவாக இருந்தது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுந்தொகையில் வரும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் என்ற சொல்லாட்சி மீன்பிடித் தொழிலின் சிறப்பைக் காட்டுகிறது. (குறு 123)- பரதவர் காய விட்ட மீனை (உப்புக்கண்டம்) விற்பனைக்காக படகுகளில் கொண்டுவந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப்பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் (பட்டினப் 185 – 193) மதுரைக்காஞ்சியும் (மதுரை 321. 323) மேலை நாட்டுக் குதிரைகளும் வட இந்தியக் குதிரைகளும் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறுகின்றன.


மதுரைக் காஞ்சி பாண்டி நாடு நெடுகிலும் குதிரை வர்த்தகம் நடந்ததாகக் கூறுகிறது. (மதுரை 315.24) இலங்கைப் பாளி நூல்கள் தமிழ் நாட்டு வணிகர் இலங்கையில் குதிரை வர்த்தகம் செய்ததாகக் கூறுகின்றன. இவ் வர்த்தகத்தில் பரதவர் ஈடுபட்டதாக செனவிரட்ண கூறுகிறார். பரதவர் கடலிலிருந்து எடுத்த உப்பை உமணர் உள்நாட்டில் விற்பனை செய்தார். நற்றிணையில் உமணர் வருகையை எதிர்பார்த்து உழாத உழவர் (பரதவர்) உப்பைக் குப்பைகளாக வைத்துக் காத்திருந்தனர் என்ற குறிப்புள்ளது. (நற் 138.12) பாண்டி நாட்டிலுள்ள சில பிராமிக் கல்வெட்டுக்கள் உப்பு வணிகர் பற்றிக் கூறுகின்றன. (ஆயாயனநஎயn 1966)


இவ்வாறு பலதரப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் பரதவர் ஈடுபட்டதினால் செல்வம் இவர்களிடத்தே குவிந்தன. சங்க இலக்கியத்தில் இவர்களது இருப்பிடங்கள், மாளிகைகள், கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புக்கள் இவர்களின் செல்வ நிலையை காட்டுகின்றன. (மதுரை 315. 323 பெரும்பாண் 319, 324 அகம் 86) புற நானூறில் வரும் ‘தென் பரதவர் மிடல் சாய’ என்ற சொற்றொடர்களும், பாண்டிய நெடுஞ்செழியனை கொற்றவன் காவலன் ‘பரதவ தலைவன்’ எனவும் கூறப்படுவது சங்ககால அரசியலிலும், சமூகத்திலும் பரதவருக்கிருந்த மதிப்பைக் காட்டுகின்றது.


இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயருக்குரியவர்கள் ஆற்றிய தொழில்கள், பதவிகள், சமூக அந்தஸ்து என்பவற்றை நோக்கும் போது சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்தை அப்படியே நினைவுபடுத்துவதாக உள்ளன. சங்க இலக்கியங்களில் பரதவ சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றிக் கூறப்படுவது போல், இலங்கை வரலாற்று இலக்கியங்களில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் இக்காலத்தில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றி ஆக்காங்கே சில குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவர் பற்றிவரும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் பெருங்கற்கால கறுப்பு – சிவப்பு மண்டபங்கள் காணப்படும் இடங்களை அண்டிய பகுதியில் காணப்படுவதை சான்றாதாரம் காட்டி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பரதவர் இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார். (1985 : 49) அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாய்வில் குடியேற்றத்தின் ஆரம்பகாலச் சான்றுகளுடன் இலங்கையில் கிடைக்கப்பெறாத பளிங்குக் கற்கள், மணிகள், குதிரை எலும்பின் எச்சங்கள் கிடைத்துள்ளன. (ஊழniபொயஅ 1996 : 81) இவை வணிக குடியேற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.


தமிழ் நாட்டில் பரதவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகப் பாண்டி நாட்டிலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே இடப்பெயர் வடமேற்கு இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் பெயராக கி.மு.6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் முழு இலங்கைக்குரிய பெயராக மாறியதை அசோகன் காலக் கல்வெட்டிலும், கி.பி.1.2.ஆம் நூற்றாண்டுக்கு உரிய வெளிநாட்டார் குறிப்புக்களிலும் காணமுடிகிறது. இவ்விடப் பெயர் ஏற்பட பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரையிலிருந்து ஏற்பட்ட வர்த்தக குடியேற்றம் ஒரு காரணமாக இருக்கலாமென கூறுவோருமுளர். ஆனால் இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படும் இப்பெயர் தமிழ் நாட்டு வலலாற்று மூலங்களில் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பின்னரே காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது இரு பிராந்தியத்திலும் வாழ்ந்த பரதவ சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்பால் இலங்கையிலிருந்தே அப்பெயர் தமிழ் நாட்டிற்கு சென்றதா என எண்ணத் தூண்டுகிறது.


பரத பற்றி வரும் கல்வெட்டுக்களில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு சிறப்பாக குறிப்பிடத்தக்கது. (வழக்கத்திற்கு மாறாக இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டுள்ள இககல்வெட்டில் பரதஸ ஹகிதஸ (டீயசயவயளயலய மவையளய) என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் பரத என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. (ஏறத்தாழ இதையொத்த கப்பல் உருவம் தமிழ் நாட்டில் அழகன் குளம் அகழ்வாய்வின் போது கி.மு.2.1 ஆம் நூற்றாண்டுக்குரிய ரௌலட்டட் மண்டபத்தில் பெறப்பட்டுள்ளது.) இது பரத என்பவனை கப்பல் தலைவனாக அல்லது, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகனாக கருத இடமுண்டு. தொலமி பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தரித்து நின்ற கப்பல் பற்றி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்பன கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திமில், அம்பி என்பன மீன் பிடித்தலுக்கும் பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் நீண்ட கடற்பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (சுப்பராயலு 1983 : 161 – 162) இலங்கையில் தமிழ் வணிகனாகிய நாவாய் தலைவன் தென்னிந்தியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்து விற்பனை செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. நாயன்மார் பாடல்கள் வங்கம் நிறைந்த துறை முகமாக வட இலங்கையில் உள்ள மாதோட்டத்தைக் கூறுகின்றன. (மயினைகிளார் 1953) இதனால் பொலநறுவைக் கல்வெட்டில் வரும் கப்பல் உருவத்தை பாளி, தமிழ் இலக்கியங்கள் கூறும் நாவாய் அல்லது வங்கமாகக் கருதலாம்.


கல்வெட்டுக்கள் சிலவற்றை நாவிக என்ற பெயருடன் படகெ, தொட என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புரணவிதாண இவை கடற்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் எனக் கூறுகிறார். இதில் படகெ, தொட என்ற சொற்கள் தமிழில் வழக்கில் உள்ள படகு, தோணி போன்ற சொற்களுடன் தொடர்புபடுத்த இடமுண்டு. அண்மையில் பிரித்தானிய nஐர்மன் ஆய்வுக் குழுவினர் அநுராதபுர பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குரிய சங்ககால நாணயங்களையும் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலம் ஒன்றின் உருவம் பொறித்த நரைநிற மட்பாண்ட ஓடு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். (ஊழniபொயஅ 1996இ92) இதில் உள்ள கடற்கலத்தை கல்வெட்டுக்களில் வரும் படகெ. தோட போன்ற சொற்களுடன் தொடப்பு படுத்தலாம். இதையொத்த உருவத்தை தமிழ் நாட்டில் புதிய கற்கால ஓவியங்களிலும் சாதவானகர் கால நாணயங்களிலும் காணமுடிகிறது. இவ் ஆதாரங்களில் இருந்து சங்க காலத்திற்கு முன்பு இருந்தே இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கடல் வாணிபத் தொடர்புகள் இருந்ததென உறுதிப்படுத்தலாம். இவை பொலநறுவைக் கல்வெட்டில் வரும் பரத என்பவனை அயல் நாடுகளுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டவனாகக் கருத இடமளிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழில்களில் ஒன்றாக முத்து, சங்கு குளித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொழில்கள் பாண்டி நாட்டிற்கும் வடமேற்கு இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் நடந்ததற்கு போதிய சான்றுகள் உண்டு. இந்தியாவைக் காட்டிலும் இலங்கையில் தரமான முத்து கிடைத்ததாக கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகத்தனில் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காலப் பகுதியில் ஆட்சிபுரிந்த இலங்கை மன்னர்கள் சிலர் இந்திய மன்னர்களுக்கு முத்தை பரிசாக கொடுத்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. பண்டு தொட்டு வடமேற்கு இலங்கையில் உள்ள சிலாபம் என்ற இடம் முத்துச் சிலாபம் என்ற பெயரை பெற்றிருந்ததற்கு இங்கு நடைபெற்று வரும் முத்துக் குளித்தலே முக்கிய காரணமாகும். பரத என்ற பெயருக்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் கணிசமானவை இப்பிராந்தியத்திலிருந்து கிடைத்திருப்பது இத்தொழில்களோடு இவர்களுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது எனலாம்.

பண்டைய இலங்கையில் மீன்பிடித் தொழிலோடு பரத என்ற பெயருக்குள்ள தொடர்பைக் காட்ட கல்வெட்டுக்களிலோ அல்லது பாளி இலக்கியங்களிலோ இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில் இதற்குரிய சான்று கிடைத்துள்ளது. இங்கு இதே காலத்திற்குரிய உதிரன், தஸபிடன், மஹசாத்தன், கபதிகடலன் போன்ற தமிழ் நாணயங்களுடன் பரததிஸ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. (டீழிநசயசயஉhஉhi 1999: 53, புஷ்பரட்ணம் 1999: 55 – 70) இதில் காணக்கூடிய சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் பரததிஸ என்ற பெயரும் முன்புறத்தில் இரு மீன்கோட்டுருவமும் இடம்பெற்றிருப்பதாகும். இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம். பின்னொட்டுச் சொல்லாக வரும் திஸ என்ற பெயருக்கு பூச நட்சத்திரம் என்ற பொருள் உள்ளது (இராசகோபால்). இப்பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல இடங்களில் வருகிறது. இப்பெயரில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் இருந்துள்ளனர். இது பிராகிருத மொழிக்குரிய பெயராக இருப்பினும் இப்பெயரில் தமிழர்களும் இருத்ததற்குப் போதிய சான்றுகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்திலுள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திஸ என்ற தமிழ் வணிகன் பற்றிக் கூறுகிறது. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று திஸ தமிழன் தமிழ் வணிகர்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகின்றது. அண்மையில் தமிழ் நாட்டில் அழகன் குளம் என்ற இடத்தில் கிடைத்த மட்பாண்டை ஓட்டில் தீசன் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது (இராசகோபால்). பேராசிரியர் சிற்றம்பலம் சங்க இலக்கியத்தில் வரும் திரையர் என்ற ஒரு இனக் குழுவைக் குறித்ததெனக் கொண்டால் அச்சொல்லிற்கும் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த திஸ, திஸ்ஸ என்ற பெயர்களுக்கும் இடையிலான தொடர்பு ஆராயப்படக் கூடியதென்பதற்கு சில சான்றாதாரங்களைக் காட்டியுள்ளார். திரை என்ற சொல்லுக்கு கடல், கடலலை, குளம் என்ற பல கருத்துக்கள் உண்டு. இலங்கையில் கிடைத்த பரத பற்றிய 21 கல்வெட்டுக்களில் 12 கல்வெட்டுக்கள் திஸ என்பனவை பரதவ (பரத) சமூகத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகின்றன. இதில் கல்வெட்டுக்களில் வரும் வணிகன், அரச தூதுவன், கப்பல் தலைவன் போன்ற பதவிகள் அனைத்தும் பரததிஸ என்பவனோடு தொடர்புடையதாக உள்ளன. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டு அதன் மத்தியில் “திஸஹ” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. (டீழிநயசய உhiஉhi 1999: 60இ ழே- 43) இதை நாணயமாக கொள்வதைவிட திஸ என்பவனுக்குரிய முத்திரை எனக் கூறலாம். இவற்றிலிருந்து மீன் பிடித்தலோடு பரதவ சமூகத்திற்கும் திஸ என்ற பெயருக்கும் உள்ள தொடர்பு தெரியவருகிறது. இச்சான்றுகள் கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளோடு பரதவ சமூகத்திற்கும் திஸ, திஸய என்ற பெயருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதால் திரையர் என்ற இனக் குழுவுடன் திஸ என்ற பெயருள்ள உறவை தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்ற கருத்திற்கு இவை மேலும் சான்றாக உள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவ சமூகத்தின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு இச்சமூகம் பற்றிய கல்வெட்டுக்கள், பண்பாட்டு மையங்களை அண்டிக் காணப்பட்டதையே சான்றாகக் காட்டுகிறார். இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பரதவ சமூகம் வாழ்ந்து வரும் இடங்களில் வட, வடமேற்கு இலங்கை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பூநகரி வட்டாரத்திலுள்ள மண்ணித்தலை என்ற கடற்கரைக் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய பல சான்றுகளுடன் குறிப்பாக கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள் (டீடயஉம யனெ சநன றயசந) தமிழ் பிராமி எழுத்துப் பொறிந்த மட்பாண்ட ஓடுகள், இரும்புக் கருவிகள் என்பவற்றுடன் மீன் பிடிப்பதற்கென ஊசிகளும் (குiளா ர்ழமள) கிடைத்துள்ளன. (புஷ்பரட்ணம் 1993). பரத என்ற சொல்லின் இன்னொரு வடிவமாக கல்வெட்டுக்களில் வரும் பத என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இப்பெயருக்குரியவர்கள் இலங்கையில் பரந்துபட்ட அளவில் வாழ்ந்தனர் எனக் கூறலாம்.


இவர்கள் வர்த்தகத்தில் மட்டுமன்றி அரசியல், கிராம நிர்வாகம், நீதி, படைத்துறை, கலை போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிகிறது. குத்திக்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு பதகுமார என்பவன் பௌத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பதகுமர என்பதை பரதகுமார என எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் சிலப்பதிகாரம் பரதவ குமாரன் என அழைத்ததற்கு சான்றுண்டு. (சிலப் 156) அண்மையில் சேருவில் என்ற தமிழ் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டில் பதகம திஸ்ஸவும், தமிழ் சோழவும் (தமிட சுட) இணைந்து பௌத்த சங்கத்திற்கு தானம் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ளுநநெஎசையவநெ 1985: 52). இதில் சோழர் தமிழராக குறிப்பிடப்பட்டமை சிறப்பாக நோக்கத்தக்கது. வட இலங்கையில் பதசுட என்ற சொல் சில கல்வெட்டுக்களில் வருகின்றன.


மேற் கூறப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்து சங்ககாலத்தைப் போல் சமகாலத்தில், இலங்கையிலும் பரதவ சமூகம் வாழ்ந்ததெனக் கூறலாம். சங்க இலக்கியத்தில் பரவர், பரதவர் என வரும் பெயர்கள் இலங்கைக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பத, பரத என மாற்றமடைந்திருக்கலாம். இதற்கு கல்வெட்டுக்களில் வரும் பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சம காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் தமிழில் இடம்பெற்றிருப்பதைச் சான்றாக கூறலாம். செனிவரட்னா பரத என்ற முன்னொட்டுச் சொல் திராவிட மொழிக்குரிய ஆய், மாற, மருமக என்ற பெயர்களுடனும், பிராகிருத மொழிக்குரிய சும, உதர, சுமலி போன்ற சொற்களுடனும் வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் இனக் குழுவைக் குறித்த பரதவ என்ற பெயர் பின்னர் சமூகப் பெயராக மாறியதாக ஒரு குருத்துண்டு. Nஐம்ஸ் ஆர்னலின் பரதவர், பரவர், பரதர் ஆகியோர் நாக இனக்குழுவை சார்ந்தவர் எனக் கூறுகிறார் (முருகானந்தம் 1990, 3) வட இலங்கை நாகதீவு எனவும், நாகர்கள் வாழ்ந்த இடம் எனவும் கூறும் வரலாற்று மரபுண்டு. இலங்கையில் பரத பற்றி வரும் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு வட இலங்கையிலும், வடமேற்கு இலங்கையிலும் காணப்படுவதுடன் சில கல்வெட்டுக்களில் பரதநாக என்ற பெயர் இணைந்து வருவதையும் காணலாம். இதனால் பரத என்ற சமூகப் பெயர் இலங்கையில் வேறுபட்ட இனக் குழுக்களிடையே சமூகப் பெயராகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் செல்வாக்கு கூடிய அளவுக்கு வட, வடமேற்கு இலங்கையில் இருந்ததெனக் கூறலாம். இன்று பரதவ சமூகம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழி பேசும் பிராந்தியங்களிலும், இலங்கையில் சிங்கள, தமிழ் மொழி பேசும் வட்டார மக்களிடமும் காணப்படுகின்றன. வட, வடமேற்கு இலங்கையில் இப்பரதவ சமூகம் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதை இடைக்கால, மத்தியகால வரலாற்று ஆவணங்களிலிருந்து அறியமுடிகிறது. இதனால் இச்சமூகத்தின் தொடக்க கால ஆதாரமாக இப்பிராந்தியத்தில் காணப்படும் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயரைக் குறிப்பிடலாம்.

தொகுப்பு:

  • நெய்தல் நில மன்னர்கள், கலாநிதி ஏ.எஸ்.சோசை, விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம், சிறப்பு மலர்: புனித ஆனாள் ஆலயம் - வங்காலை
  • கலாநிதி ப.புஸ்பரட்ணம் (2003), பண்டைய இலங்கையில் பரதவர் சமூகம், சில தொல்லியல் சான்றுகள், தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, (யாழ் பல்கலைக்கழகம்).

22 June 2010

தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு- புனைவும் புரட்டும் சில செய்திகள்


தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.

என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.

படகோட்டிக்குப் பிறகு மீனவர் வாழ்வையும் கடற்கரைப் பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் கதை நிகழும் களமாக மீனவர் பகுதி அமைந்திருந்ததே தவிர கதையின் கரு காதல் அல்லது பழிக்குப் பழிவாங்கும் தமிழ்ச் சினிமாவின் அதே புளித்துபோன சரக்காகவே இருக்கிறது.

இவ்வாறான காதல் அல்லது குடும்ப உறவு பற்றிய சித்திரிப்பும் மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவதாக இருப்பதில்லை. தமிழ்ச் சினிமாக்களில் ஏதோவொரு வகையில் மீனவர்களையும் அவர்களது வாழ்வையும் காட்சியாக்கியிருந்தவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அவை விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலேயே அமைந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கும், அரசுக்கும், அரசியலாளர்களுக்கும் மீனவர் குறித்து எவ்வாறு ஒரு புரிதலும் அக்கறையும் இல்லையோ அவ்வாறே தமிழ்த்திரைத் துறையினர்க்கும் மீனவர் குறித்தும் அவர்களது வாழ்நிலை, பண்பாடு, தனித்தன்மை குறித்த எவ்விதப் புரிதலும், அக்கறையும் இல்லாமலிருக்கிறது என்பதையே இதுவரையிலான திரைப்பதிவுகளும் அல்லது புறக்கணிப்புகளும் சுட்டிக் காட்டுகின்றன.

கிராமமே இந்தியாவின் இதயம் என்று கூறிய மகாத்மாவின் கூற்றை அப்படியே பின்பற்றி கிராமப் புறத்தையே கதைக் களமாகவும், கிராமப்புறச்சாதிப் பண்பாட்டையும், நிலமானிய மதிப்பீடுகளையும், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை விண்ணளவு புகழ்ந்து போற்றும் திரைப்படங்களே தமிழ்ச் சினிமாவில் பெரும்பான்மையாகும். இந்நிலை இன்றளவும் தொடரும் அதே சமயம் அவற்றோடு உலக மயத்தின் தீவிரத்திற்குப்பின் நகர்ப்புறம் சார்ந்த பஃப், பிட்ஷா பண்பாடும் சரி பாதியளவு தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.

ஆனால் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மற்றும் சிறுபான்மையின மக்களும் அவர்களது வாழ்க்கையும் இன்றளவும் தமிழ்ச் சினிமாவில் தனக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. அவ்வாறு இவர்களது வாழ்வியலைக் காட்சியாகவும், இவர்களைக் கதாபாத்திரங்களாகவும் ஊறுகாயைப் போல் தொட்டுக் கொள்ளும் ஒரு சில திரைப்படங்களும் தமிழ்ச் சமூகத்தின் சமவெளிப் பார்வையிலிருந்து, மேலிருந்து கீழ்நோக்கும் மேட்டிமைத் தன்மையோடு அடித்தள மக்களை இழித்தும் பழித்தும் காட்சிப்படுத்துகிறது.

இந்தப்போக்கு 1931இல் தமிழ்ச் சினிமா பேசத் துவங்கியதிலிருந்து (முதல் பேசும் தமிழ் சினிமா - காளிதாஸ்) காணப்பட்டாலும் அவ்வப்போது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை கதாபாத்திரங்களாகக் கொண்டும் அரைகுறை யதார்த்தத்தோடும் சமரசவாத, சந்தர்ப்பவாதத் திரைப்படங்கள் இடையிடையே தலைகாட்டவே செய்தன. இந்தப் போக்கு 1960க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் சற்றுக் கூடுதலாக இருந்தது. இந்த நிலை 1990க்குப் பிறகு மாறி மீனவர் உள்ளிட்ட அடித்தள மக்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் தமிழ்த் திரையில் தேசத் துரோகிகளாகவும், அடியாட்களாகவும், வில்லன்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு அதிகரித்தது.

1960, 70களில் உழைக்கும் மக்களை கதாநாயகர்களாகவும் பண்ணையாளர்களை வில்லன்களாகவும் காட்டியதற்கு நேர்மாறான நிலை 1990களில் துவங்குகிறது. அதேபோல் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் அமைதி, சமாதானம் போன்றவற்றிற்கு உதாரணமாக காட்டிய தமிழ்ச் சினிமா அவர்களை கெட்டவர்களாக காட்டத் துவங்கியதும் 90களுக்குப் பிறகுதான்.

சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த பாவமன்னிப்பு (1961) திரைப்படத்தில் இசுலாமியர் கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவும் மேலெல்லாம் விபூதி, சந்தனம் பூசிப் பக்திப் பழமாக காட்சியளிக்கும் இந்து (எம்.ஆர்.ராதா) வில்லனாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையோடு இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதக் கண்ணோட்டத்தில் தமிழ்த் திரைத்துறை அடைந்துள்ள பாரதூரமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இதே போக்கு 1990க்குப் பின் வந்த மீனவர் பற்றிய திரைப்பதிவுகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக மீனவக்குப்பங்கள் பயங்கரமானவையாகவும், மீனவர்கள் முரடர்களாகவும், ரவுடிகளாகவும், அநாகரிகர்களாகவும், அடியாட்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு மேலோங்கியது (தூத்துக்குடி, அட்டகாசம், விரும்புகிறேன், நாயகன், ஜித்தன், அரசு, தீபாவளி, 1977). இதுபோன்ற திரைப்படங்கள் ஓர் யதார்த்த உண்மையை வெளிக் காட்டுவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது இன்று கடலும் கரையும் மீனவரல்லாத பிற சமவெளி ஆதிக்க சாதியினரால் கைப்பற்றப்பட்டு மீன் பிடியல்லாத பிற வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையை உணர்த்துவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து மீனவச் சாதியினரில் சிலர் அல்லது பலர் தாதாக்களாக, அடியாட்களாக மாறி உள்ளனர் என்றால் அதற்கு அரசு, ஆளும் வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டும். மீனவர்களுக்குச் சொந்தமான, பாரம்பரியமாக இருந்து வந்த கடலையும், கடற்கரைப் பிரதேசத்தையும் நவீன முதலாளிய அரசு பன்னாட்டு முதலாளியத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டி பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்து மீனவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் போது அவர்கள் மீன் பிடித்தொழிலை விடுத்து பிற சட்ட விரோத நடவடிக்கைகளில் இறங்குவது தவிர்க்க முடியாததாகிறது. இதற்கு பாரம்பரிய மீனவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், பிற வாய்ப்பு வழங்கப்படாதவர்களாகவும் இருப்பதே காரணமாகும்.

அதாவது இன்றைய நவீன அரசின் காலனியமய விரிவாக்கமே இது போன்ற விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது எனலாம். தமிழகத்தின் கடற்கரை கன்னியாகுமரி துவங்கி சென்னை வரை மிக நீண்டதாக இருக்கிறது. இந்தக் கடற்கரையோரத்தில் தென் பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையான மீனவச் சாதியாக கிறிஸ்தவ பர(த)வர் என்பாரும் அடுத்துள்ள இராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் கிறிஸ்தவ கடையர், கிரிஸ்த பரவர், கரையாளர், வலையா, படையாச்சிகள் என்போரும் வடக்கே செல்லச்செல்ல கிறிஸ்தவர்கள் சற்றுக் குறைந்து இந்து மீனவர்கள் அதிகமாகவும் காணப்படுகின்றனர். இவர்களோடு இசுலாமியர்களும் மீன்பிடித் தொழில், சங்கு குளித்தல் போன்ற தொழில்களில் கணிசமாக ஈடுபட்டு வருகின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்ய இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியரால் கடற்கரையோரங்களில் இருந்த மீனவர்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு மீனவர்கள் குறிப்பாக பரதவர், கடையர் மதம் மாறியதற்கான காரணம் என்ன என்பதும், தமிழகத்தில் மன்னர்களுக்கு நிகரான பொருளாதார வசதியோடு தமிழகத்தில் இருந்த வணிகர்களோடு சமமாக வணிகத்திலும், கடலோடிகளாகவும் விளங்கிய பரதவர்கள் பிற்காலத்தில் மிகவும் பின்னடைந்து போனது ஏன்? எவ்வாறு என்பதும் ஆய்வுக்குரியது.

சிலப்பதிகாரம் புகார் நகரை பட்டினம் பாக்கம் என்று பிரித்து அதில் வாழும் மக்கள் பிரிவு பற்றிக் கூறுமிடத்தில் பரதவர் குறித்தும் அவர்களது பொருளாதார வலிமை குறித்தும் மிகவும் சிலாகித்துக் கூறுகிறது. ஆனால் அன்று புகாரின் அழிவுக்குப்பின் அங்கிருந்து இடம் பெயர்ந்து செட்டிநாட்டுப் பகுதியில் (சிவகங்கை மாவட்டம் காரைக்குடிச் சுற்று வட்டாரம்) குடியேறிய நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களது புகழும், உலகமெல்லாம் பரவி வாழும், பொருளாதாரம் ஈட்டும் அவர்களது நிலையோடு பரதவர் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு?

முன்னாள் நிதியமைச்சர் இன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாம் மேலே கூறிய நகரத்தார் சமூகத்தில் பிறந்து வளர்ந்து செட்டிநாடு தந்த தங்கம் என்று போற்றப்படும் போது சிலப்பதிகார காலத்தில் இவர்களோடு ஒட்டி உறவாடிய பரதவர் மட்டும் மய்யப்படுத்தப்பட்ட அதிகாரத்திலிருந்து வெகு தூரத்தில், விளிம்பில் இயற்கையோடும், சமவெளி மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கையோடும் போராடிக் கொண்டிருக்க நேர்ந்தது ஏன்? என்பதும் ஆய்வுக்குரியதாகும். ஆனால் அதற்கு இது இடமில்லை.

தமிழகத்தின் நீண்ட கடற்கரையோரம் வாழ்கின்ற பாரம்பரிய மீனவர்கள் இன்றைய சமூக, அரசியலில் அதிகாரம் செய்யும் சமவெளி வாழ்க்கை முறையிலிருந்து விலகிய தூரப்படுத்தப்பட்ட நீரும் நிலமும் சார்ந்த தனித்தன்மை வாய்ந்த வாழ்முறையைக் கொண்டவர்கள். அதேசமயம் இந்து மதச் சாதிப்பாகுபாடுகளை முற்றிலும் துறந்தவர்கள் என்றோ அல்லது தீண்டாமையைக் கைக்கொள்ளாதவர்கள் என்றோ, நிலமானிய அரசியல், பொருளாதாரப் பண்பாட்டைப் பேணாதவர் என்றோ கூறுவதற்கில்லை.

மீனவர் என்ற பதத்திற்குள் பல்வேறு சாதி மத வர்க்கப்பாகுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் போராட்டங்களும் அதன் விளைவான மோதல்களும் சாதல்களும் உண்டு. இந்த முரண்பாடு, மோதல், சாதல்களுக்குள் நிலவும் அரசு, அரசியல்வாதிகள் தலையீடுகளும் அதன் பின்னே உள்நாட்டு ஆளும் வர்க்கம் துவங்கி பன்னாட்டு முதலாளியம் வரையிலானவர்களின் நலனும், பேராசைகளும் உண்டு. இவற்றைப் பற்றியெல்லாம் நமது தமிழ்ச் சினிமா வெளிப்படுத்தியிருக்கிறதா?

இதுவரை வெளிவந்த மீனவர் தொடர்பான காட்சிகளைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்தினால், படகோட்டி (1964), திருவிளையாடல் (1965), அன்னை வேளாங்கன்னி (1971), ஆதிபராசக்தி (1971), மீனவ நண்பன் (1981), தியாகம் (1978), கடல் மீன்கள் (1981), அலைகள் ஓய்வதில்லை (1981), ஆனந்த ராகம் (1982), கடலோரக் கவிதைகள் (1986), சின்னவர் (1992), தாய்மொழி (1992), செம்பருத்தி (1992), கட்டுமரக்காரன் (1995), நிலாவே வா (1998), காதலுக்கு மரியாதை (1997), சிட்டிசன் (2001), கடல் பூக்கள் (2001), குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் (2009) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. சில விடுபடல்கள் இருக்கலாம். குறிப்பாக கமலஹாசன் நடித்து தெலுங்கில் வந்து பிறகு மொழிமாற்றி தமிழுக்கு வந்த பாசவலையும் இயக்குநர் விஜயன் இயக்கி விஜயகாந்த் நடித்த தூரத்து இடி முழக்கமும் பிரதி கிடைக்காததன் காரணமாக இங்கு விரிவாக அதுபற்றி பேச முடியவில்லை. அதேபோல் மேலே நாம் பட்டியலிட்டுள்ள திரைப்படங்களில் குறிப்பிட்ட ஒரு சில மட்டுமே மீனவர் வாழ்வைப் பற்றிய படங்களாகும்.

சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், தியாகம் இரண்டும் மீனவர் பற்றிய திரைப்படமல்ல. மீன்பிடி மற்றும் கடற்கரை தொடர்பான சில காட்சிகள் இடம் பெறுகின்றன அவ்வளவுதான். அதேபோல் ஆதிபராசக்தியில் இடம் பெறும் மறைந்த நடிகர் சுருளிராஜன் மனோரமா ஜோடி ஆடிப்பாடும் காட்சியும் ஆத்தாடி மாரியம்மா என்ற பாடலும் மிகவும் பிரபலமாக இருந்ததைத் தவிர அப்படத்தினை மீனவர் வாழ்வு பற்றிய திரைப்பட வகையில் அடக்க முடியாது.

அதைப்போலவே இயக்குநர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள் இரண்டும் கடல் கரையையும், கடலையும் அதிகம் காட்சியாகக் கொண்டிருந்தனவே தவிர மீனவர் பற்றிய திரைப்படங்கள் அல்ல. மேலும் அவை சில அபத்தமான, மோசமான காட்சிகளைக் கொண்டிருந்தன என்றும் கூறும்படியிருந்தது.

அலைகள் ஓய்வதில்லை (1981)யில் அப்பாவிக் கதாநாயகனாக பார்ப்பனரையும், வில்லனாக கிறிஸ்தவரையும் (நாயகியின் அண்ணன் டேவிட் பாத்திரம்) காட்டி இருப்பார். சாதி, தீண்டாமை பற்றிய தலைகீழான படம் இது. பொருளாதார, முரண்பாடு மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்ட திரைப்படம். இதே போக்கு 20 ஆண்டுகள் கழித்து பாரதிராஜா இயக்கிய கடல்பூக்கள் (2001) படத்திலும் தொடர்கிறது.

கருத்தையா (முரளி), கயல் (உமா), பீட்டர் (மனோஜ்), மரியம் (சிந்து) என்ற நான்கு முக்கிய பாத்திரங்களில் கருத்தையாவும் அவன் தங்கையும் மிகவும் உயர்ந்த பண்பு நலன்களுடனும் கடலையும், கிராமத்தையும் நேசிப்பவர்களாக, தியாகிகளாக, பொறுமைசாலிகளாக இருக்கின்றனர். மரியம், பீட்டர் அவர்களது அம்மா ஏமாற்றுபவர்களாக சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இறுதியில் பீட்டர் கருத்தையாவிடம் மன்னிப்பு வேண்டுபவராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். கதை நிகழும் இடம் முட்டம் என்று கூறப்படுகிறது. முட்டத்தைக் கதைக்களமாகக் கொண்ட இவரது கடலோரக் கவிதை. மற்றும் கடல் பூக்கள் இரண்டிலுமே அபத்தக் காட்சிகள் பல உள்ளன.

கடலோரக் கவிதைகள் சத்யராஜ் (சின்னப்பதாஸ் பாத்திரம்) ரேகாவிடம் (ஜெனிஃபர் டீச்சர் பாத்திரம்) கடலுக்குள் மூழ்கி எடுத்து வந்து சங்கு ஒன்றை பரிசளிப்பார். அச்சங்கு தோல் நீக்கி சதை நீக்கி சுத்தம் செய்து பாலிஷ் செய்யப்பட்ட சங்காக இருக்கும். கடலுக்குள் மூழ்கி எடுத்து வரும் சில நிமிடங்களிலேயே இவ்வளவையும் செய்துவிட பாரதிராஜாவால் மட்டுமே இயலும். இதைப்போலவே கடல்பூக்களில் டைட்டில் காட்சியில் கடலோரத்தில் சிதறிக்கிடக்கும் (இவர்கள் போட்டு வைத்த) சங்கு, சோவி (சோளி)களில் பாலிஷ் செய்து முகுல் உடைத்த வெண் சங்குகளும் கிடக்கும். அவற்றில் சிலவற்றை பாரதிராஜா பொறுக்குவதாக காட்சி நகரும். (இதுபோல் சங்குகள் எல்லாம் கரையில் கிடைப்பதில்லை). கதையோட்டத்தின் நடுவே முரளி (கருத்தையா), பிரதிக்ஷா (உப்பிலி)யிடம் இடம் புரிச்சங்கைக் காட்டி இது வலம்புரிச்சங்கு என்று கூறி அதை அறுத்து வளையல் செய்வதாகக் கூறுவார்.

இவையெல்லாம் பாரதிராஜா மிக எளிதாக தவறிழைத்த இடங்களாகும். இதுதவிர இன்னும் ஆழமான குறைகளான மீனவர் மொழி, முட்டம் பகுதி சார்ந்த பண்பாட்டு வழமைகள், மீனவருக்கும் கடலுக்கும் இடையிலான உறவு, மீனவரது இயற்கை பற்றிய அறிவு, தொழில்நுட்பம் போன்ற எவ்வளவோ விசயங்கள் மற்ற எல்லா மீனவர் திரைப்படங்களிலும் காணப்படாதது போலவே பாரதிராஜா படத்திலும் காணப்படவில்லை.

மேலும் மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, வலை, கட்டுமரம், வாலே, போலே என்ற விளித்தல் போன்றவை இருந்தால் அது மீனவர் பற்றிய திரைப்படம் என்ற தமிழ்ச் சினிமாவின் பொதுவான இலக்கணத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவாலும் கடக்க முடியவில்லை. கிராமப்புறத்தையும் மறவர் சாதிப் பெருமிதங்களையும் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்திய பாரதிராஜாவால் மீனவரது வாழ்க்கையை யதார்த்தப்பூர்வமாக காட்சிப்படுத்த முடியாமல் போனது தற்செயலானது அல்ல.

கமலஹாசன் இரு வேடங்களில் நடித்த கடல் மீன்கள் (1981) திரைப்படமும், சிவகுமார் நடித்த ஆனந்த ராகம் (1982) திரைப்படமும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான மீனவர் திரைப்படங்களாகும்.

கடல் மீன்கள் ரோசம்மா ஜான் என்பவரது மூலக்கதையை அடிப்படையாகக் கொண்டு பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம் எழுதி ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.

கதைக்களம் எந்த ஊர் என்பது துல்லியமாக குறிப்பிடப் படவில்லை. திரைப்படத்தின் இரண்டு மூன்று காட்சிகளில் மண்டபம் மார்க்கெட் என்ற சொல்லாடல் வருகிறது. அது இராமநாதபுரம் மாவட்டம் மண்டபமா என்பது தெரியவில்லை.

செல்வம் (கமலஹாசன்) இந்து மீனவர். பாக்கியம் (சுஜாதா) அவரது முதல் மனைவி, இவர்களது மகன் ராஜன் (கமலஹாசன்). கதை ஒரு மீனவனது வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களின் கோர்வை என்று கூறலாம். நாட்டுப்படகு மீனவராக வாழ்க்கையைத் தொடங்கும் செல்வம் பின்பு ஆங்கிலேயர் உதவியுடன் விசைப்படகு (லாஞ்ச் உரிமையாளராகி பின்னாளில் விசைப்படகு உற்பத்தி நிறுவனத்தின் அதிபராக, செல்வவினாயகம் என்று அழைக்கப்படும் பெரிய மனிதராகவும் இவரது விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுடைய வலைகளை அறுத்துவிடும்போது நட்ட ஈடு வழங்குபவராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

மற்றபடி வழக்கமான மசாலாப் படங்களில் காணப்படும் அடிதடி சண்டைக் காட்சிகள் ஆடல் பாடல், காதல், மோதல், பழிக்குப் பழி வாங்கும் போக்கு போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். வழக்கமான மசாலாக் கதை நிகழும் களமாக மீனவர் வாழ்வும் கடலும் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தவிர மீனவர் வாழ்வு குறித்த எவ்வித சரியான புரிதலும் ஏற்பட இப்படம் உதவவில்லை. வேண்டுமானால் மீனவர் பற்றிய தவறான கற்பிதங்களை இப்படம் தோற்றுவித்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒன்று செல்வம் (கமல்) தனது நண்பர் பீட்டருக்கு (நாகேஷ்) மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது.

ஆனந்த ராகம் இப்படத்தின் கருவிலிருந்து சற்று வேறுபட்டது. இதில் காதல் மய்யமான இடத்தைப் பெறுகிறது. இதுவும் நாட்டுப் படகு மீனவர் வாழ்வை மய்யமாகக் கொண்டு நிகழும் கதைதான். ஆனால் நாட்டுப்படகு மீனவருக்குண்டான பிரத்யோக சிரமங்கள், தொழில் நெருக்கடிகள், அவலங்கள் போன்றவை காட்சிப் படுத்தப்படவில்லை. இதுவும் இந்து மீனவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்ட திரைப்படம்தான். கதை: தாமரைச் செந்தூர்பாண்டி, இயக்கம்: பரணி.

மீனவர் வாழ்வைப் பிரதிபலிக்காத மிக பலகீனமான பாத்திரத் தேர்வு, காட்சியமைப்புக் கொண்ட இத்திரைப் படத்தின் முடிவில் நாயகனும் (சிவகுமார்) நாயகி (ராதா)யும் இறந்து போகின்றனர். திரைப்படத்தின் பெரும்பகுதியை கள்ளுக் கடை காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. மீனவர் என்றாலே குடிகாரர்கள் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.

1992இல் மூன்று மீனவத் திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. தாய்மொழி, சின்னவர், செம்பருத்தி. தாய்மொழி அ.செ.இப்ராகிம் இராவுத்தர் படம், வசனம் லியாகத் அலிகான், இயக்கம்: ஆர்.இளவரசன், கௌரவத் தோற்றத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
கதாநாயகன் சரத்குமார் (ராஜசிம்மன்) நாயகி மோகினி (மேரி) வில்லன் மன்சூரலிகான் (மரியதாஸ்) மற்றும் கிறிஸ்தவ மக்கள். இப்படத்தில் விதவை மறுமணம், சாதி மத மறுப்புத் திருமணம் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. அதற்குத் தடையாக வரும் விசைப்படகு மீன்பிடி முதலாளி மரியதாஸ் தண்டிக்கப்படுவதே திரைப்படத்தின் கதை. இப்படத்திலும் நாட்டுப்படகு விசைப்படகு முரண்பாடு ஏழை பணக்காரன் முரண்பாடு போன்றவை பேசப்படுகிறது. ராஜசிம்மன் தனி ஒரு மனிதனாக நின்று மரியதாஸ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவரையும் எதிர்த்து சர்ச்சில் வைத்து மேரிக்குத் தாலி கட்டுவதோடு படம் முடிகிறது.

மதச் சிறுபான்மையினரை கெட்டவர்களாக சித்தரிக்கும் தமிழ்ச் சினிமாக்களின் துவக்ககால படங்களில் ஒன்றாக தாய்மொழியைக் கருதலாம். அ.செ.இப்ராகிம் ராவுத்தரும், லியாக்கத் அலியும் இணைந்து ராஜசிம்மனை கதாநாயகனாகவும் மரியதாஸ்-அய் வில்லனாகவும் ஆக்கியிருப்பது வேதனைதான்.

பின்னாளில் வந்த ரஜினியின் பாட்ஷா திரைப்படத்திற்கு இது முன்னோடி என்றுகூட கூறலாம். மாணிக்கமும் பாட்ஷாவும் சேர்ந்து (மாணிக்பாட்ஷா) வில்லன் ஆண்டனியை எதிர்ப்பதுதான் பாட்ஷாவின் மய்யம்.

ஓர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாயக ஜோடியினர் இணைந்து இந்து வில்லனை எதிர்ப்பதான கதையையும் காட்சியமைப்பையும் கொண்ட ஓர் திரைப்படம் சம காலத்தில் ஏன் தமிழில் வரவில்லை என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லது வந்தால் அத்திரைப்படத்தின் நிலை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். அதே சமயம் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் கொடிய வில்லன்களாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் (விஜயகாந்த், அர்ஜூன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள்) வெகு சாதாரணமாக வந்து போனதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

செம்பருத்தி கோவைத்தம்பி தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1992இல் வெளிவந்த திரைப்படம். வசனம்: ஜான் அமிர்தராஜ், கதைக்களம்: கடலும் கடல் சார்ந்த பகுதி. ஆனால் ஊர் குறிப்பிடப்படவில்லை. இதுவும் இந்து மீனவர் பற்றிய கதைதான். இதிலும் நாட்டுப் படகு மீனவருக்கும் விசைப்படகு மீனவருக்குமிடையிலான முரண்பாடு பேசப்படுகிறது. பணக்கார வாலிபனுக்கும் (பிரசாந்த்) ஏழை மீனவக் குலப் பெண் (ரோஜா)வுக்கும் இடையிலான காதல் தான் கதையின் மய்யம். வர்க்க முரண்பாட்டைக் கடந்து காதலர்கள் சேர்வதே கதை. மற்றபடி புதிதாக ஒன்றுமில்லை.

இதே ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த பிரபு நடித்த சின்னவர் திரைப்படமும் இந்து நாட்டுப்படகு மீனவர் பற்றிய கதையை மையமாகக் கொண்டதே ஆகும். 1995இல் ஏ.ஜி. சுப்பிரமணியம் தயாரித்து பி.வாசு இயக்கத்தில் வெளிவந்தது கட்டுமரக்காரன். பிரபு (முத்தழகு) கதாநாயகன். வில்லன் ஆனந்தராஜ் (கிறிஸ்தவ முதலாளி). கேனத்தனமான பல்வேறு காட்சிகளைக் கொண்ட வழக்கமான மசாலாத் திரைப்படம் இது.

1998 இல் விஜய் நடித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தயாரித்து ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த நிலாவே வா திரைப்படம் மிக ஆச்சர்யப்படுத்திய திரைப்படம். கதாநாயகப் பாத்திரம் ஓர் கிறிஸ்தவ மீனவர் - சிலுவை (விஜய்). கதை நிகழும் ஊர் சின்னக்காயல். மற்றபடி படம் வழக்கமான அபத்தங்கள் நிறைந்த குப்பைதான். கிறிஸ்தவ மீனவர்க்கும் ஓர் இந்துப் பெண்ணுக்கும் இடையிலான காதல்தான் கரு. காதலுக்குத் தடையாக வரும் மதத்துவேசம் விமர்ச்சிக்கப்பட்டு இறுதியில் காதலர் கூடுவதே கதை.

இதே விஜய் கதாநாயகனாக நடித்த காதலுக்கு மரியாதை (1997). திரைப்படத்தில் மீனவக் குப்பம் மற்றும் மீனவர்கள் நல்லவர்களாகவும் காதலுக்கு உதவும் உள்ளமும் அதற்காக எவரையும் எதிர்த்து நிற்கும் போர்க்குணமும் ஒற்றுமையும் கொண்டவர்களாக இயக்குநர் பாசிலால் முன்னிறுத்தப்பட்டிருந்தனர். அதே சமயம் இம்மீனவர்களும் கதாநாயகனும் இந்துக்களாகவும் நாயகியின் அண்ணன்கள் கோபக்கார கிறிஸ்தவர்களாகவும் அச்சமூட்டுபவர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.

2001இல் அஜித் நடித்து ஷரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படம் அதிகார வர்க்கத்தால் ஒரு மீனவக் கிராமமும் மீனவர்களும் அழித்தொழிக்கப்படுவதை காட்சிப் படுத்தியிருந்தது. மீனவராக வரும் அஜித் இந்து மீனவராகவும் அவரது மகனாக வரும் அஜித். இசுலாமியராகவும், கிறிஸ்தவராகவும் வேடம் கொண்டு அதிகார வர்க்கத்தை பழிவாங்குவதே அல்லது தண்டிப்பதே கதை. மீனவர்களை அதிகார வர்க்கம் ஏய்ப்பதை சுட்டிக்காட்டிய திரைப்படம் மீனவர்களது பிற பிரத்யோக பிரச்சனைப்பாடுகளைப் பற்றிக் கூறவில்லை. மேலும் இது மீனவரது வாழ்வியலைப் பற்றிய திரைப்படமாக அமையாமல் அஜித்தின் ஹீரோ பிம்பத்தை கட்டியமைக்கும் நோக்கம் கொண்ட திரைப்படமாக அமைந்திருந்தது.

நாம் இதுவரை பார்த்து வந்த மீனவத் திரைப்படங்களின் கதை மற்றும் காட்சி அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மீண்டும் நாம் கட்டுரையின் துவக்கத்தில் கூறயவற்றையே உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

எம்.ஜி.ஆரின் படகோட்டியின் அளவுக்கு மீனவரின் பிரச்சினைப் பாடுகளை (தான் முன் வைக்கும் பிரச்சினைகளான: முதலாளிகள் தங்களது லாபத்திற்காக மீனவர்களைப் பிரித்து மோதவிடுகி றனர், இந்த மோதலும், ஒற்றுமையின்மையும் மீனவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. எனவே மீனவர் ஒற்றுமையே இலட்சியம்) திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதிக்காட்சி வரை பேசிய திரைப்படம் வேறு ஒன்றுமே இல்லை. ஓரளவாவது நெருங்கி வருவது அதே எம்.ஜி.ஆரது மீனவ நண்பன் திரைப்படம் மட்டுமே.

ஆனால் 1964க்கும் 1977க்கும் இடையே நடந்த மாறுதல்கள் மீனவ நண்பன் திரைப்படத்தில் வெளிப்படவே செய்வதோடு, பின்னாளில் வந்த மீனவத் திரைப்படங்களின் குறைபாடுகளுக்கான மூலங்களை நாம் மீனவ நண்பனிலேயே காண முடிகிறது.

படகோட்டி (1964) திரைப்படத்தின் கரு மீனவர் ஒற்றுமை ஆகும். ஒரே இனத்தைச் (சாதியை இனம் என்றே திரையில் எம்.ஜி.ஆர். கூறுகிறார்) சேர்ந்த திருக்கை மீன் குப்பம், சுறா மீன் குப்பம் இரண்டுக்கும் இடையே பாரம்பரியப் பகை நிலவுகிறது. திருக்கை மீன் குப்பத்திற்கு மாணிக்கம் (எம்.ஜி.ஆர்.) நாட்டாமை. சுறா மீன் குப்பத்திற்கு அலையப்பன் (ராமதாஸ்) நாட்டாமை. சுறா மீன் தலைவரின் மகள் முத்தழகி (சரோஜா தேவி) மாணிக்கத்தின் காதலி. இவ்விரு குப்பத்தினரையும் மோதவிட்டு அதற்காக அலையப்பனை கைக்குள் போட்டுக் கொண்டு அதன் மூலம் பொருளாதார அரசியல் லாபம் அடைந்துவரும் முதலாளி நீலமேகம் (நம்பியார்) அவரது அடியாள் கந்தப்பன் (அசோகன்) ஆகிய பாத்திரங்களை மய்யமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.

நீலமேகம் மீன் வியாபாரியாக வருகிறார். மீனவர்கள் புயல் மழைக் காலத்தில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் பசி பட்டினியால் தவிக்கும்போது கடன் கொடுத்து ஒன்றுக்குப் பத்தாக எழுதி கைநாட்டு வாங்கி மீனவர்களை அடிமைகளாக வைத்து தான் நிர்ணயிக்கும் விலைக்கே மீன்களை மீனவர் தருமாறு செய்து அவர்களைச் சுரண்டுகிறார்.

படிப்பறிவும் விழிப்புணர்வும் இல்லாத மீனவர் மத்தியில் மாணிக்கம் மட்டுமே கல்வியறிவும் அரசியலறிவும் பெற்றவராக இருப்பதால் நீலமேகத்தை எதிர்த்தும் அவரது சுரண்டலை எதிர்த்தும் குரல் எழுப்புகிறார். ஆனால் இரு குப்பத்து மீனவர்களும் மீண்டும் மீண்டும் நீலமேகம் முதலாளியின் வலையில் விழுந்து மாணிக்கத்தை புறக்கணிக்கவும், தாக்கவும், பழிக்கவும் செய்கின்றனர். தனது தந்தை இறக்கும் தருவாயில் மீனவர் நலனுக்குப் பாடுபடுவதாக தனது தந்தைக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை காக்கவும், மக்கள் நலனுக்குப் பாடுபடும் தலைவர் அவர்களது அறியாமையின் காரணமான ஏச்சுப் பேச்சு இழித்தல் பழித்தல் போன்றவற்றை பொருட்படுத்தக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்பின் வழிநின்றும் இறுதி வரைப் போராடி வெற்றியும் பெறுகிறார்.

இந்த மய்யத்திற்கு துணையாகவே காதல் வருகிறது. 1964இல் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பார்வைக்கு ஏற்படவே மக்களின் எதிரி (மீனவர்களின் எதிரி)யான முதலாளியை சட்டப்படி தண்டிப்பதும், அரசிடம் கோரிக்கை வைத்துப் பலன்பெற்று முன்னேறுவது என்ற கருத்தாக்கமும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற கருத்தும் காட்சியுமே மீனவ நண்பனிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 1977இல், தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்த போதும் (திரையில் அ.தி.மு.க. கொடி, இரட்டை இலைச் சின்னம், கருப்பு சிவப்பு வெள்ளை போன்றவை காட்டப்படுவதோடு உதயகுமார் கொலையை நினைவூட்டும் காட்சியும் வசனமும் முன் வைக்கப்பட்டுள்ளன) மீனவ நண்பன் திரைப்படத்தின் மய்யமான பார்வை தனி மனிதர்களான முதலாளிகளை விமர்சிப்பது, திருத்துவது, திருந்தாதவர்களை அரசு, காவல் துறை மூலம் கைது செய்து தண்டிப்பது (அதுவும் திருந்துவதற்குத்தான்) பாதிக்கப்பட்ட மீனவர்களை அரசின் பொருளாதார உதவிகொண்டு காப்பது என்பதாகவே இருக்கிறது.

அரசு பற்றிய மார்க்சிய லெனினியப் பார்வையான அரசு (ஆளும்) வர்க்கத்தின் கருவி என்பதற்கு மாறான பார்வையைக் கொண்ட திராவிட இயக்கத்தின் அணுகு முறையே படகோட்டி, மீனவ நண்பன் இரண்டிலும் பின்பற்றப்படுவதை காண முடிகிறது. மேலும் பலாத்காரத்தை மக்கள் மேற்கொள்வதை எதிர்த்து, தடுப்பவராகவும், மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை மக்களுக்குப் போதிப்பவராகவும் எம்.ஜி.ஆர். தோன்றுகிறார். 70, 80களில் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் மக்கள் கிளர்ந்தெழுவது, முதலாளி, பண்ணையார் கொடுமைகளை எதிர்த்துத் தாக்குவது, கொலை செய்வது போன்ற போக்குகளுக்கு மாறாக எம்.ஜி.ஆரின் (சமூக) திரைப்படங்கள் தீயவர்களை அரசிடம் ஒப்படைப்பது என்பதில் கறாராக இருந்ததுடன், மக்கள் கிளர்ந்து எழுவது என்ற போக்கையும் மறுத்து மக்களுக்காக தனி ஒரு மனிதன் (தலைவன்) போராடி, சண்டையிட்டு, (அவர் எதிரிகளை நையப்புடைப்பது வன்முறையாகாது ஏனெனில் அவர் நோக்கம் திருத்துவதுதானே தவிர தண்டிப்பது அல்ல. சீமானின் ‘தம்பி’ எம்.ஜி.ஆரது மறு பிறப்புதான்) நன்மைகளைப் பெற்றுத் தருவான் எனும் ஹீரோயிசத்தையும் வளர்த்த அதே சமயம் அந்த தனிமனிதனை (தலைவனை) விட்டு மக்கள் பிரியாதிருப்பதையும், சூழ்ந்துகொண்டு கொண்டாடுவதையும், புகழ்வதையும் தனது படங்களில் காட்சியாக்கினார். அதாவது மக்களை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அவர்களது இடம் என்ன, எல்லை என்ன அல்லது செயல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்து காட்சியாக முன் வைத்ததே அவரது பிற்கால அரசியல் செல்வாக்கின் அடித்தளமாக அமைந்தது எனலாம்.

ஆனால் 1977க்குப் பின் வந்த பிற நடிகர்கள் நடித்த மீனவர் பற்றிய திரைப்படங்கள் மக்களைப் பற்றி (மீனவர்களைப் பற்றி) கவலைப்படவில்லை. எனவே அவர்களைக் காட்சிப்படுத்துவதில் அக்கறையும் காட்டவில்லை. மீனவர் சமூகத்தைப் புறக்கணித்த தனிமனிதரின் (மீனவனின்) காதல், குடும்ப உறவு, உணர்வு போன்றவற்றையே கதையின் மய்யமாகக் கொண்டன. எம்.ஜி.ஆர். வழங்கிய செயலூக்கமற்ற மந்தைப் பாத்திரம் கூட பிற்காலப் படங்களில் மக்களுக்கு கிடைக்கவில்லை.

படகோட்டி திரைப்படம் முன் வைத்த வில்லன் நீலமேகம் அவர் வாயாலேயே தான் செம்படவர்களை விட உயர்ந்த சாதி, பணக்காரன் என்று ஒரு காட்சியில் கூறுவார். எனவே மீனவ இன (செம்படவர்)த்தின் எதிரியாக மீனவரல்லாத உயர் சாதி வியாபாரி ஆதிக்கம் செய்வதாகவும், சுரண்டுவதாகவும், கடலுக்குள் இறங்கி உயிரைப் பணயம் வைத்து மீனவர் பிடித்துவரும் மீனுக்கு கடலில் இறங்காத, கடலோடு தொடர்பில்லாத மனிதர்கள் விலை வைப்பதும் மீனவர் வயிற்றிலடிப்பதும் என்ற படகோட்டித் திரைப்படம் முன்வைத்த காட்சியானது இன்றைக்கும் தென் பகுதி மீனவர் வாழ்வின் யதார்த்தமாக இருப்பது படகோட்டித் திரைப்படத்தை சிறப்புடையதாக்குகிறது. இதன் காரணமாகத்தான் தென் மாவட்ட மீனவர்கள் படகோட்டித் திரைப்படம் காண இன்றும் குவிகிறார்களோ என்று தோன்றுகிறது.

அதேபோல் பிற்காலத் திரைப்படங்களில் காணப்படக்கூடிய மதத் துவேச, இந்து மதச் சார்வுப் போக்கு எம்.ஜி.ஆரது படகோட்டி மற்றும் மீனவ நண்பன் இரண்டிலும் காணப்படவில்லை. படகோட்டியில் நீலமேகமும் (நம்பியார்), மீனவ நண்பனில் ஆத்மநாபன் (வி.கே.ராமசாமி), அருண் (நம்பியார்) வில்லன்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர், இசுலாமியரில் முதலாளிகள், வியாபாரிகள் அல்லது மீனவர் நலனைப் பாதிப்பவர்கள் இருக்கவே செய்வர் அதனை திரைப்படத்தில் காட்சியாக்குவதில் தவறு ஏதும் இல்லை.

தமிழகத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர் மீனவத் தொழிலாளியாக அல்லது வியாபாரி, முதலாளியாக இருப்பர். மற்றொரு பகுதியில் இசுலாமியர் அல்லது இந்து அதுபோல் இருப்பர். இது பகுதி சார்ந்தது. எப்பகுதியில் யார் மீனவர் நலனைப் பாதிக்கின்றனரோ அப்பகுதியில் அவர் எதிர்க்கப்படப் போகிறார். அவ்வாறே கதை நிகழும் களத்தை தெளிவாகச் சுட்டி அப்பகுதியின் உண்மை நிலையை தமிழ்ச் சினிமா படம் பிடித்துக் காட்டினால், இதுபோன்ற போக்கு அதாவது கதாநாயகர்கள் எல்லாம் இந்துப் பாத்திரங்களாகவும், வில்லன்கள் எல்லாம் மாற்று மதத்தினராகவும் அமையும் ஒருதலைப்போக்கு எழ வாய்ப்பில்லை. ஆனால் மீனவர் வாழ்வு பற்றிய சரியான புரிதல் ஏதுமில்லாத சமவெளி சார்ந்த வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செய்யும் தமிழ் சினிமாவில் அவர்களால் முன் வைக்கப்படும் மீனவர் உள்ளிட்ட பிற விளிம்பு நிலை மக்கள் தொடர்பான காட்சிகள் அல்லது கருத்துகள் இதுபோல் புனைவாகவோ அல்லது புரட்டாகவோதான் இருக்கும். இன்றைக்கு தமிழ்ச் சினிமாத்துறை என்பதும் தமிழ்ச் சினிமா என்பதும் பல்வேறு உயர் மற்றும் இடை நிலைச் சாதியினர் கைப்பற்றி தத்தமது சாதிப் பெருமிதங்களையே கதையும் காட்சியுமாக்கி தமிழக மக்கள் மத்தியில் பரப்பி தங்களது சாதிய நலனை காத்தும் வளர்த்தும் வருகின்றனர். இவ்வாறான செயல்களினூடே தங்களது படங்களில், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களை தங்களது உளவியலில் படிந்து போயுள்ள சாதியாதிக்கப் படிமங்களிலிருந்து பாத்திரமாக்கி இழிவு செய்கின்றனர். இவர்களது திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களது கதாபாத்திரங்கள் இடம் பெறுவதைவிட இடம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதே மேல் என்று எண்ணும்படியாக காட்சிகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில் தங்களைப் பற்றிய சரியான பதிவை புரிதலை தமிழ்ச் சினிமாவில் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைச் சாதி கலைஞரும் தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றுவது அல்லது தமிழ்ச் சினிமாவில் தமக்குரிய பங்கைப் பெறுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மீனவர் பற்றிய சரியான பதிவு தமிழ்த் திரையில் காட்சியாக விரிய வேண்டுமானால் பாரம்பரிய மீனவச் சாதியில் பிறந்த மீனவ இளைஞர்கள் தமிழ்ச் சினிமாவில் நுழைந்து தமது இருப்பை உணர்த்துவதும், தமக்குரிய பங்கைப் பெறுவதும் உடனடி அவசியமாகும்.

இவ்விடத்தில் நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. 80க்குப் பிறகு வந்த மீனவர் பற்றியத் திரைப்படங்களைவிட ஒப்பிட்டு ரீதியில் எம்.ஜி.ஆரது படகோட்டி பரவாயில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? மீனவர் சாதியில் பிறந்தவரா எம்.ஜி.ஆர். அல்லது படகோட்டியை இயக்கிய இயக்குநர் மீனவரா? படகோட்டி படத்தின் தயாரிப்பு: எஸ்.என்.வேலு மணி, மூலக்கதை: நன்னு(பி.பி.சந்திரா), வசனம்: டி.கே.கிருஷ்ணசாமி, திரைக்கதை, இயக்கம்: டி.பிரகாஷ் ராவ். இவர்களைப் பற்றிய விவரம் தெரியவில்லை. படகோட்டி திரைப்படத்தின் சிறப்பிற்குக் காரணம் அரசியல் பிரச்சாரக் கருவியாக திரைப்படத்தை பயன்படுத்தி மக்களை தம் பக்கம் ஈர்க்க விரும்பியது திராவிட இயக்கம். அந்த நோக்கத்தின் பொருட்டு மக்கள் பிரிவினரில் பலருடைய பிரச்சனைப் பாடுகளையும் பற்றி திரையில் பேசியதும், காட்சிப்படுத்தியதும் தான் என்று தோன்றுகிறது. இதற்கு பல கதை வசனகர்த்தாக்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயன்பட்டிருக்கின்றனர். இதேபோக்கு பொதுவுடைமை இயக்கம் சார்ந்தவர்களாலும் கூட முயற்சி செய்யப்பட்டதை திரைப்பட இயக்க வரலாறு கூறுகிறது.

பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து விலகிய பிறகு தனது அரசியல் (இமேஜ்) வளர்ச்சிக்கு திரைப்படத்தையே பயன்படுத்தினார் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாகவே மீனவ நண்பன் திரைப்படம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். புகழ்பாடிய இயக்குநர்கள் பலரில் ஒருவராக ஸ்ரீதரும் மீனவ நண்பன் படத்தை கதை வசனம் எழுதி இயக்கியதன் மூலம் அடையாளம் காணப்படுகிறார்.

எம்.ஜி.ஆருடைய இந்த வழிமுறையைத்தான் விஜயகாந்த் போன்றோரும் பின்பற்றி தம்முடைய அரசியல் இமேஜ்ஜை வளர்த்துக் கொள்ள முயல்கின்றனர். ஆனால், ஒரு இயக்கத்தின் அரசியலை முன்னிறுத்துவதற்கும் தனி மனிதரை முன்னிறுத்தி துதி பாடுவதற்கும் இடையிலான வேறுபாடுதான் படகோட்டிக்கும் அதற்குப் பின் வந்த திரைப்படங்களுக்குமான வேறுபாடு. படகோட்டியில் இருந்து மீனவ நண்பன் பல்வேறு சமரசங்களையும், சந்தர்ப்பவாதச் சரிவுகளையும் கொண்டிருக்கிறது. படகோட்டியில் மீனவச் சாதியில் பிறந்த மீனவருக்கு அதே மீனவ இனத்தில் பிறந்த முத்தழகி ஜோடி. மீனவ நண்பனில் மீனவருக்கு நண்பர் மீனவ இனத்திற்கு வெளியே இருந்து வந்து உதவி புரிபவருக்கு மீனவரல்லாத மீனவர்களின் எதிரியான முதலாளியின் மகள் ஜோடி.

படகோட்டியில் இருந்த கடற்காட்சிகளுக்கு மாறாக மீனவ நண்பனில் லதாவுடன் காதல் புரிவதே மீன் பிடிக் காட்சியாக அமைக்கப்பட்டிருப்பது கேலிக் கூத்தாகும். பின்னாளில் வந்த படங்களில் இக்கேலிக்கூத்து இன்னும் அதிகமாகியது. மீனவர்கள் திரைச் சீலையைப் போல் பின்னணியில் அசைய கடற்கரையில் காதலர்கள் ஓடி ஆடிப்பாடும் அல்லது கதாநாயகன் வில்லனையும் அவனது அடியாட்களையும் அடித்துப் புரட்டும் களமாக கடலும் கரையும் மாறிப்போனது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் கடலும் கரையும் சமவெளி மனிதர்களின் உல்லாச வெளியாக, உடற்பயிற்சி மைதானமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களிலேயே துவங்கி விடுகிறது. சிலப்பதிகார கானல் வரிப்பாடல்களே இதை உணர்த்துகின்றன. தசாவதாரத்தில் கமலஹாசன் இன்னும் ஒரு படி மேலே போய் சுனாமியையே நலன் பயக்கும் ஒன்றாக தனது சமவெளிப் பார்வையில் காட்சிப்படுத்தியதோடு சுனாமி பாதிப்பின் பின்புலத்தில் நாயக நாயகியின் காதல் மலரும் காட்சியையும் வைத்திருந்தது மீனவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் செயலாகும்.
கடல் பற்றிய மீனவனின் உணர்வை ஒரு சமவெளி மனிதன் பெறுவது குதிரைக் கொம்போ என்று நினைக்கும்படியாகவே இவர்களது செயல்பாடுகள் இருக்கிறது. சமவெளியின் தளங்களில் எவ்வித உரிமையும் அற்ற மீனவ மக்கள் தங்களுக்குச் சொந்தமான கடல் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் யதார்த்த நிலவரமே திரையிலும் கடற்கரைக்காட்சியில் முன்னணியிலிருந்து பின்னணிக்கு மீனவர்கள் தள்ளப்பட்டதாக பிரதிபலிக்கிறது. இதுவே தமிழ்ச்சினிமாவின் சமகால மீனவர் பற்றிய பதிவாகும்.

2009இல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் சரண் தயாரிப்பில் இராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மீனவர் பற்றிய திரைப்படமான குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது சமகால பொரளாதார அரசியல், தொழில் நெருக்கடிகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நேரிடையாகப் பேசாமல் மீனவச் சமூகத்து இளைஞர்களது காதல், குடி, கொண்டாட்டம், மற்றும் மீனவர்களுக்கிடையிலான சாதியப் பிளவுகள் போன்றவற்றை காதலினூடே காட்சியாக உணர்த்திச் செல்கிறது. வழக்கமான காதல் திரைப்படங்களில் காணப்படும் இளைஞர் இளைஞிகளது பொருளாதார வருவாயின் ஆதாரங்களைப் பற்றிய இருட்டடிப்பது போலவே குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தின் மீனவக் குடும்பங்களின் பொருளாதார நிலை பற்றிய எவ்விதப் பதிவும் இல்லை.

இப்படமும் கடலையும் கடற்கரையையும் துவக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை கொண்டிருந்தும் கூட மீனவர்களது வாழ்வியலைக் கூறும் படம் என்று கூற முடியாதவாறு பல்வேறு தடைகளைக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இதுவரையிலான மீனவர் பற்றிய தமிழ்ச் சினிமாக்களை விட செய்நேர்த்தி, பாத்திரத் தேர்வு, தோற்றம், ஆடை அணிகலனில் நுணுக்கம், நடிகர்கள் அல்லாத அப்பகுதி சார்ந்த மனிதர்களையே திரையில் நடமாட விட்டும், புகழ்பெற்ற அல்லது முன்பே திரையில் தோன்றி மக்களுக்கு அறிமுகமான நடிகர்களை முற்றிலும் தவிர்த்து அனைவரும் புதுமுகங்களாகவே தேர்வு செய்து பார்வையாளர்களுக்கு, பாத்திரங்கள் மட்டுமே கண்முன் நிற்கும்படியாகச் செய்ததன் மூலம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்றவற்றால் தனது தனித்தன்மையை குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படமும் அதன் இயக்குநர் இராஜமோகனும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றனர்.

எவ்வளவுதான் மீனவர்களது பிரச்சினைகளைப் பேசினாலும் படகோட்டி எம்.ஜி.ஆர். படம், குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசாவிட்டாலும் மீனவர் இளைஞனின் காதலை அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேசினாலும் இது மீனவர் படம் என்று கூறும் அளவிற்கு நாம் மேற்கூறிய விசயங்கள் வற்புறுத்துகின்றன. இதுதான் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்ற புதிய தலைமுறை இயக்குநர்களின் பலம் பலகீனமாக இருக்கிறது. காட்சியமைப்பு யதார்த்தமாக, பலமாக இருக்கிறது. ஆனால் 60, 70களில் இருந்த (அரசியல்) கருத்தியல் அழுத்தம் தற்போது இல்லை. அது பலகீனம். ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் அரசியல் உணர்வோடு அடித்தள மக்கள் பற்றியதும் அவர்களது வாழ்வியல் பிரச்சனைகள் பற்றியதுமான திரைப்படங்களை காட்சியாக்கி தமிழக மக்களுக்கு வழங்குவார்களானால் அதுவே ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுடைய சினிமாவாக இருப்பதோடு தமிழ்ச் சமூகப்பொது உளவியலைச் சற்று அசைத்தும் பார்க்கும்.

-குமரன்தாஸ்-
உயிர்மெய் சிறப்புமலர் 2009-2010