திவ்விய
சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின்
மஹோன்னத
ரதோற்சவ கொண்டாட்ட திருவிழா
கட்டளைப்
பிரகடனம்
திரிபுவன
சராசரப் பொருளனைத்தையுமோருரையா லருளிய
தேவத்துவத்தின்
ஊற்றாகிய பிதாவாகிய சருவேசுரனுடைய குமாரத்தியுமாய்
தீய
கனியால் விளைந்த மாய வினையொழிக்க மானுஷ்ய ஜெனனமெடுத்த
சுதனாகிய
சருவேசுரனுடைய தாயாருமாய்
திருச்சபைக்கலங்காரக்
கிரீடமுந் தீர்க்கதரிசனர்க் கருட்பிரகாசமுமளித்த,
திவ்ய
இஸ்பிரீத்துசாந்து சருவேசுரனுடைய பத்தினியுமாய்
திரீத்துவத்திலே
ஏகத்துவத்தை யறிந்துணரக் கிருபை புரிந்த,
பரம
இரகசியமாகிய தமதிரீத்துவத்தின் உன்னத தேவாலயமுமாய்
அரிய
எஸ்கலின் மலையில் யுவாம் பத்திரீஸ் அருளப்பருக்கு
உறைபனி
காட்சி தந்து ஆலயஞ்செய்பிக்க நிருபித்த தயாபரியுமாய்
அஞ்ஞான
இருளினின்று மெய்ஞ்ஞானத்தில் நிலைநிறுத்திய
நமது
ஞானப்பிதாவாகிய அர்ச்சியசிஷ்ட சவேரியார்
நமக்குப்
பாதுகாவலாய்க் குறிப்பித்த பத்திராசனமுமாய்
1555ந்தாமாண்டு
ஜூன் மாதம் ஒன்பதாந்தேதி மெனிலாப்பட்டணத்திலிருந்து
சந்தலேதனாள்
கப்பல் வழியாய் நமக்குக் கிடைக்கப்பெற்ற பொக்கிஷமுமாய்
அளவறுக்கப்படாத
கிருபாகடாக்ஷத்தோடு தமதம் போருகப் பதமண்டினோரை,
ஆதரித்திரட்சை
புரியும் மஹா அருட்பிரகாசியுமாய்
கிருபை
திகழ் அன்னையிவளென நம்பினோர்க்கொரு துயரில்லை
யென்னும்
ஆச்சரியத்திற்கோர் ஆஸ்பதமுமாய்
கிரீடாதிபதி
கோத்திரத் துதையதாரகையாயெழுந்த உத்தம பாக்கியவதியுமாய்
கெஞ்சி
மன்றாடுவோர் மனச்சஞ்சலந் தீர்த்தருளும்மூவஞ்சு தேவ இரகசியச்சஞ்சீவியுமாய்
கீர்த்தியாய்
ஜோதிமதி மீனதனை ஓரொளியாய் ஜொலிக்கச் சீர்த்தி அமைந்த அற்புத அலங்காரியுமாய்
பரலோக
பூலோக இராஜேஸ்பரியுமாய், பாவிகளுக்கடைக்கலமுமாய்
பிரீதியுடன்
எழுகடல் துறைக்கும் நாமுண்டென்று சொல்லிப் பிசகாது
பாதுகாக்கும்
பேரின்ப இராக்கினியுமாய்
நமக்கு
விசேஷ பாதுகாவலும் ஏக அடைக்கலமும் நேசமுள்ள தாயாருமாகிய
பரதர்
மாதாவென்னும் பனிமயத் தாயாகிய நமது திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் மஹா கெம்பீரமான
மஹோன்னத ரதோற்சவ திருநாள் கொண்டாடுவதற்கு வருகிற (சனிக்கிழமை) பின்னேரம் நவநாள் துவக்கமென்றறிவீர்களாக
!
No comments:
Post a Comment