17 November 2010

குருஸ்பர்னாந்து 141-ம் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் தலைவர் குருஸ்பர்னாந்தீஸ் அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு 15.11.2010 அன்று அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.




மீனவ மக்கள் கட்சி

குரூஸ்பர்னாந்தீஸ் அவர்களின் 141வது பிறந்த நாள் விழா மீனவ மக்கள் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

கட்சியின் நிறுவனத்தலைவர் அலங்காரபரதர் கட்சி கொடி ஏற்றினார். மாநில பொதுச் செயலாளர் மரியஜாண் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மாநில அவைத்தலைவர் ரிச்சர்ட் தேவசகாயம், மாநில பொருளாளர் அந்தோணிசாமி, மாநில துணைத்தலைவர் சகாயராஜ், மாநில செயலர் ஜோசப் மணி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாய் காஸ்ட்ரோ, மாநில அமைப்பாளர் ஜெயேந்திர பரதர், மாநில மக்கள் தொடர்பாளர் ரோக் பரதர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் வினோத் முறாயிஸ், மாநில இளைஞரணி துணைத்தலைவர் சேவியர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரிக்ஸ்டன், மாவட்ட துணைத் தலைவர் அசோக்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்


பரதர் நலச்சங்கம் சார்பில் செயலாளர் ஹெர்மன்கில்டு, திமுக சார்பில் கால்நடைத்துறை அமைச்சர், அதிமுக சார்பில் ஜெனிபர் சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் குருஸ்பர்னாந்தீஸ் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திருமதி. ஜெனிபர் சந்திரன்

1 comment:

  1. தாமஸ் விக்டோரியா1:57 AM

    தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவரான குரூஸ் பர்னாந்து குறித்த குறுந்தகட்டை ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.பி. சுடலையாண்டி வெளியிட்டார்.
    தூத்துக்குடி நகராட்சியில் 13 ஆண்டுகள் தலைவராக பணியாற்றியவர் குரூஸ் பர்னாந்து. தூத்துக்குடி நகருக்கு தாமிரபரணியில் இருந்து தனிக் குழாயில் தண்ணீர் கொண்டு வந்த இவர், தூத்துக்குடி நகரின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
    இவரைப் பற்றி மாநகராட்சி ஊழியர் ரஸ்கின் எழுதிய பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா தூத்துக்குடி மட்டக்கடையில் நடைபெற்றது. விழாவில், சுடலையாண்டி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குறுந்தகட்டை வெளியிட்டு பேசினார். பாடல்களை மதுரை மாயா இசைக்குழுவைச் சேர்ந்த யூசுப் என்பவர் பாடியுள்ளார்.

    ReplyDelete