தூத்துக்குடி பரதகுல பிரமுகராகிய அமரர் திரு. செலஸ்டீன் மச்சாது அவர்களின் நூற்றாண்டு விழா 23.09.2010 மாலை தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள ராஜம் மஹாலில் நடைபெற்றது. கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் நெவில் கற்றார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சமூகநலத்துறை அமைச்சர் கலந்து கொண்டு மச்சாது புகழ் குறித்து பேசினார்.
பின்னர் அமரர் திரு. செலஸ்டீன் மச்சாது அவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.
அப்போது அமைச்சர் பேசுகையில், செலஸ்டீன் மச்சாது எந்த பதவியையும் வகிக்காமல் நகரின் நலனுக்காகவும், மீனவர் சமுதாய நலனுக்காகவும் பல்வேறு சலுகைகளை பெற்றுத் தந்தவர். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் குக்கிராமமாக இருந்த தூத்துக்குடியை இன்று மாநகராக வளர்ச்சி பெற காரணமாக இருந்தவர். நகரின் முக்கிய சாலைக்கு அவருடைய பெயர் வைக்க மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத் தலைவர் அடைக்கலம், மாநில திமுக மீனவர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பெர்னார்டு ஆகியோர் பேசினர். செலஸ்டீன் மச்சாது சிறப்பு தபால் உறையை தூத்துக்குடி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் வேல்சாமி வெளியிட பொனோ வென்சர் ரோச் பெற்றுக் கொண்டார். விழாக்குழு துணைத் தலைவர் ஜோ வில்லவராயர் நன்றி கூறினார்.
ஷிப்பிங் கார்ப்ரேஷன் டைரக்டர் தஸ்நேவிஸ் பெர்னான்டோ, நாட்டுபடகு மீனவர் சங்கம் கயஸ், வில்லவராயர் சன்ஸ் இயக்குநர் ஜேசையா வில்லவராயர், வ.உ.சி கல்லூரி முதல்வர் பிரான்சிஸ், ஆல்ட்ரின் ராயன், ரினால்ட் வில்லவராயர், விழாக்குழு செயலாளர்கள் அன்ரோ மச்சாது, ஹேர்டிலி மச்சாது, விக்ராந்த் மச்சாது, சிசில்மச்சாது, ஜேசையா வில்லவராயர், இமானுவேல் மச்சாது, விழாக்குழு உறுப்பினர்கள நிக்கோலஸ் தர்மபாலன், டெரன்ஸ் வில்லவராயர், தாமஸ் பெர்னான்டோ, செயலாளர்கள் அன்டோ மச்சாது, ஹாட்லி மச்சாது, விக்ரந்த் மச்சாது, சிசில் மச்சாது, ஜேசையா வில்லவராயர், இம்மானுவேல் மச்சாது, நசீரின், போனோ ரோச், பீட்டர் பெர்னான்டஸ், குணபாலன், பிரின்ஸ்டன் பெர்னான்டோ, பெட்ஸ் பெர்னான்டஸ், நெப்போலியன், பொருளாளர் சகாயமச்சாது மற்றும் பரதகுல மக்கள் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment